வவுனியா, உக்கிளாங்குளம் பகுதியில் உள்ள வீட்டுக் கிணற்றில் இருந்து இளைஞர் ஒருவரின் சடலம் இன்று மீட்கப்பட்டுள்ளது.
வவுனியா, உக்கிளாங்குளம் இரண்டாம் ஒழுங்கையில் வசிக்கும் வர்த்தகரான இளைஞர் ஒருவர் கடந்த புதன்கிழமை முதல் காணாமல் போயிருந்ததாக இளைஞனின் தாயாரால் வ்வுனியா பொலிசில் முறைப்பாடு செய்யப்பட்டிருந்தது.
இந்நிலையில் இன்று குறித்த இளைஞனின் தாயார் தமது வீட்டுக் கிணற்றடியில் இளைஞன் அணியும் செருப்பு இருந்ததை அவதானித்து கிணற்றை பார்த்த போது குறித்த இளைஞனின் சடலம் காணப்பட்டுள்ளது.
தியாகலிங்கம் ரகுவரன் (வயது 26) என்பவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
இதனையடுத்து பொலிசாருக்கு தகவல் வழங்கப்பட்டதையடுத்து பண்டாரிக்குளம் பொலிசார் விசாரணைகளை மேற்கொண்டு வருகிறார்கள்.

0 Comments