Ad Code

Responsive Advertisement

Ticker

6/recent/ticker-posts

பாதுகாப்பை பலப்படுத்துகின்றது வடகொரியா

வடகொரியா தனது பாதுகாப்பை பலப்படுத்தி வருவதாக தென்கொரியாவின் யொன்ஹாப் செய்தி சேவை தெரிவித்துள்ளது.
வடகொரியா தனது விமானங்களை கிழக்கு கடலோரப்பகுதியை நோக்கி நகர்த்தியுள்ளது ஏனைய தற்பாதுகாப்பு நடவடிக்கைகளையும் மேற்கொண்டுள்ளது என தென்கொரிய செய்திஸ்தாபனம் தெரிவித்துள்ளது.
அமெரிக்கா தன்மீது போர்ப்பிரகடனம் செய்துள்ளதாக வடகொரியா தெரிவித்துள்ள கருத்தினால் பதட்டநிலை தீவிரமடைந்துள்ள நிலையிலேயே இந்த தகவல் வெளியாகியுள்ளது.
வடகொரியா மீது அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் போர்பிரகடனம் செய்துள்ளார் என வடகொரியாவின் வெளிவிவகார அமைச்சர் ரி யாங்கூ தெரிவித்துள்ளார்.
எங்களிற்கு எதிரான போரை முதலில் அமெரிக்காவே அறிவித்துள்ளது என்பதை உலகநாடுகள் புரிந்துகொள்ளவேண்டும் என அவர் தெரிவித்துள்ளார்.
இதற்கு எதிரான எதிர்நடவடிக்கைகளை எடுப்பதற்கு எங்களிற்கு உரிமையுள்ளது எங்கள் எல்லைக்கு அருகில் பறக்கும் அமெரிக்க விமானங்களை சுட்டுவீழ்த்துவோம் என அவர் தெரிவித்துள்ளார்

Post a Comment

0 Comments