Ad Code

Responsive Advertisement

Ticker

6/recent/ticker-posts

மியான்மார் முஸ்லிம்கள் மீதான தாக்குதலை கண்டித்து மட்டக்களப்பில் ஆர்ப்பாட்டம்

மியன்மார் ரோஹிங்யாவில் முஸ்லிம்கள் கொல்லப்படுவதை கண்டித்தும் அங்கு முஸ்லிம்கள் மீதான தாக்குதலை நிறுத்தக் கோரியும் காத்தான்குடியில் வெள்ளிக்கிழமை(1.9.2017) ஜும்ஆத்தொழுகையின் பின்னர் ஆர்ப்பாட்ட பேரணியொன்று நடைபெற்றது.
காத்தான்குடி பள்ளிவாயல்கள் முஸ்லிம் நிறுவனங்களின் சம்மேளனம் மற்றும் காத்தான்குடி ஜம் இய்யத்துல் உலமா சபை என்பன இணைந்து இந்த ஆர்ப்பாட்ட பேரணியை ஏற்பாடு செய்திருந்தது.
;.
காத்தான்குடி ஐந்தாம் குறிச்சி ஜாமியுழ்ழாபிரீன் ஜும்ஆப்பள்ளிவாயலில் இருந்து ஆரம்பான இவ்வார்ப்பாட்ட பேரணி காத்தான்குடி பிரதேச செயலகம் வரை சென்று அங்கு ஐக்கிய நாடுகள் சபைக்கும் மற்றும் இலங்கை அரசாங்கத்திற்கும் மகஜர்கள் கையளிக்கப்பட்டன.
காத்தான்குடி உதவி பிரதேச செயலாளர் ஏ.சி.அகமட் அப்கர் அவர்களிடத்தில் காத்தாhன்குடி பள்ளிவாயல்கள் முஸ்லிம் நிறுவனங்களின் சம்மேளன செயலாளர் அஷ்ஷெய்ஹ் ஏ.எல்.எம்.சபீல் நழீமி மற்றும் காத்தான்குடி ஜம் இய்யத்துல் உலமா சபையின் செயலாளர் மௌலவி எம்.சி.எம்.றிஸ்வான் மதனீ ஆகியோர் இந்த மகஜரை கையளித்தனர்.
இந்த ஆர்ப்பாட்ட பேரணியில் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் பொறியியலாளர் சிப்லி பாறூக் மற்றும் காத்தான்குடி நகர சபையின் முன்னாள் தலைவர் எஸ்.எச்.அஸ்பர் மற்றும் முன்னாள் மாகாண சபை உறுப்பினர் கே.எல்.எம்.பரீட் உட்பட பள்ளிவாயல் சம்ளேமன பிரதி நிதிகள் உலமா சபை பிரதி நிதிகள் மற்றும் சமூக நிறுவனங்களின் பிரதி நிதிகள் பொது மக்கள் என பலரும் கலந்து கொண்டனர்.
மியன்மார் ரோஹிங்யாவில் முஸ்லிம்கள் கொல்லப்படுவதை உடனடியா மியன்மார் அரசாங்கம் நிறுத்துவதுடன் ரோஹிங்யாவில் வாழும் முஸ்லிம்களின் குடியுரிமையை உறுதி செய்ய வேண்டும். பாதிக்கப்பட்டு அகதிகளாக உள்ள ரோஹிங்ய முஸ்லிம்களுக்கான மனிதாபிமான உதவிகள் போய் சேருவதற்கான வழிவகைகளை ஐக்கிய நாடுகள் சபை மற்றும் ஜரோப்பிய மற்றும் சர்வதேச நிறுவனங்கள் ஒழுங்கு படுத்த வேண்டும்.
மியன்மார் ரோஹிங்யாவில் முஸ்லிம்கள் சகல உரிமைகளையும் பெற்று வாழ்வதற்கான ஏற்பாடுகளை உடனடியாக செய்ய வேண்டும்;
மியன்மார் ரோஹிங்யாவில் முஸ்லிம்கள் கொல்லப்படுவதற்கெதிராக மியன்மார் அரசாங்கத்தையும் அந்த நாட்டு தலைவர் மீதும் சர்வதேச போர் குற்ற விசாரணை நடாத்தப்படல் வேண்டும் என இந்த ஆர்ப்பாட்டத்தின் போது வலியுறுத்தப்பட்டது.
DSC03843DSC03861DSC03863DSC03867

Post a Comment

0 Comments