கிழக்கு மாகாண விவசாய நீர்ப்பாசன அமைச்சர் கிருஸ்ணபிள்ளை துரைராசசிங்கம் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமாகிய இரா சம்பந்தன், மத்திய நீர்ப்பாசன அமைச்சர் விஜித் விஜயமுனி செய்சா, கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபிஸ் நஸீர் அகமட், பாராளுமன்ற உறுப்பினர்களான சீ.யோகேஸ்வரன், ஞா.ஸ்ரீநேசன், மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி.பிஎஸ்.எம்சார்ள்ஸ் மாகாண மாகாணசபை உறுப்பினர்கள் விவசாயிகள், பொதுமக்கள் எனப் பலரும் கலந்துகொண்டனர்.
கிழக்கு மாகாண விவசாய அமைச்சர் மேற்கொணட முயற்சியின் காரணமாக மத்திய நீர்பாசனத் திணைக்களத்தின் நிதிப்பங்களிப்பின் மூலம் இவ்வணைக்கட்டு அமைக்கப்படவுள்ளது.
1957ல் ஏற்பட்ட பெருவெள்ளத்தில் பாதிப்புற்ற இவ்வணைக்கட்டானது அதன் பின்னர் விவசாய நடவடிக்கைகளுக்கு ஏதுவான நிலையில் இல்லாமல் வருடா வருடம் பல மில்லியன் ரூபாய்கள் செலவில் மண் கட்டுகளாகப் புதுப்பிக்கப்பட்டு வந்திருந்தது இதனால் விவசாயிகள் பெரும் பாதிப்பை எதிர்நோக்கி வந்தனர். தற்போது இவ்வணைக்கட்டு நிரந்தரமாக அமைப்பதற்கு ஏதுவான இடம் தெரிவு செய்யப்பட்டு அணைக்கட்டு அமைக்கும் பணிகள் ஆரம்பித்துள்ளன.
இவ்வணைக்கட்டினை அமைப்பதற்காக 650 மில்லியன் ரூபாய்கள் ஒதுக்கீடு செய்ய்பட்டுள்ளதாக மத்திய நீர்ப்பாசன அமைச்சர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.









0 Comments