Ad Code


 

Ticker

6/recent/ticker-posts

தாதிய உத்தியோகஸ்தர்களின் வேலை நிறுத்தம் கைவிடப்பட்டுள்ளது

வடமாகாண தாதிய உத்தியோகஸ்தர்களின் பணிப் பகிஸ்கரிப்புப் போராட்டம் கைவிடப்பட்டுள்ளது.
தாதிய உத்தியோகத்தர்களினால் நாளைய தினம் பணிப் பகிஸ்கரிப்புப் போராட்டம் முன்னெடுக்கப்பட இருந்த நிலையில் போராட்டம் கைவிடப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
வடமாகாண சுகாதார அமைச்சர் நாளை பிற்பகல் 2.30 மணிக்கு வடமாகாண சுகாதார அமைச்சின் கேட்போர் கூடத்தில் தாதிய உத்தியோகஸ்தர்களின் சங்கப் பிரதிநிதிகளை சந்தித்து கலந்துரையாடல் ஒன்றை நடத்தவுள்ளார்.
இது குறித்து வடமாகாண சுகாதார அமைச்சின் செயலாளர் கடிதம் ஒன்றினை அனுப்பியுள்ளார்.
இந்த நிலையில் போராட்டம் கைவிடப்பட்டுள்ளதாக வடமாகாண அரச தாதிய உத்தியோகஸ்தர்கள் சங்கம் அறிவித்துள்ளது.

Post a Comment

0 Comments