Ad Code


 

Ticker

6/recent/ticker-posts

யாழில் படகு விபத்து 6 மாணவர்கள் பலி - உயிரிழந்தவர்களின் விபரங்கள் வெளியீடு

யாழ். மண்டைத்தீவு கடற்பரப்பில் ஏற்பட்ட படகு விபத்தில் 6 மாணவர்கள் உயிரிழந்துள்ளதாகவும் ஒருவர் உயிர் தப்பியுள்ளதாகவும் ஊர்காவற்துறை பொலிஸார் தெரிவித்தனர்.
இன்று பிற்பகல் 1.30 மணியளவில் இந்த துயர சம்பவம் இடம்பெற்றுள்ளது.
உயிரிழந்த மாணவர்களின் சடலங்கள் தற்போது, யாழ்.போதனா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளன.
இன்று கல்வி பொதுத் தராதர உயர்தரப் பரீட்சையின் பிரதான பாடங்கள் நிறைவடைந்த நிலையில், குறித்த மாணவர்கள் படகு சவாரி சென்ற போது படகு கவிழ்ந்ததில் இந்த விபத்து நேர்ந்துள்ளது.
உயிரிழந்த மாணவர்கள் யாழ்.கொக்குவில், நல்லூர், உரும்பிராய் ஆகிய பகுதிகளைச் சேர்ந்தவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
உயிரிழந்த மாணவர்களின் பெயர் விபரங்கள் வெளியாகியுள்ளது.
நந்தன் ரஜீவன் (உரும்பிராய் ) 18 , நாகசிலோஜன் சின்னத்தம்பி (உரும்பிராய்) 17 , தனுரதன் (கொக்குவில்) 20 , பிரவீன் (நல்லூர்) 20 ,தினேஷ் (உரும்பிராய்) 17 ,தனுசன் (சண்டிலிப்பாய்) 18







Post a Comment

0 Comments