Ad Code


 

Ticker

6/recent/ticker-posts

மட்டக்களப்பில் புதையல் தோண்ட முற்பட்டவர்கள் கைது

மட்டக்களப்பு மாவட்டத்தின் வவுணதீவு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட காஞ்சிரங்குடா பகுதியில் நேற்று வியாழக்கிழமை மாலை புதையல் தோண்டியதாக சந்தேகத்தின் பேரில் ஐவர் கைது செய்யப்பட்டுள்ளதுடன் புதையல் தோண்டுவதற்கான உபகரணங்களும் கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவிக்கின்றனர் . மட்டக்களப்பு வவுணதீவு பொலிஸ் பிரிவுக்குற்பட்ட காஞ்சிரங்குடா – அலியார் குளம் –இடும்பன்வட்டை பகுதியிலேயே இவர்கள் கைதுசெய்யப்பட்டதாக வவுணதீவு பொலிஸார் தெரிவித்தனர்.
வவுணதீவு பொலிசாருக்கு கிடைக்கபெற்ற ரகசிய தகவலுக்கு அமைய வவுணதீவு பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி பி .டி. நசிர் தலைமையிலான பொலிஸ் குழுவினர் நேற்று மாலை மேற்கொண்ட சுற்றிவளைப்பில் இவர்கள் செய்யப்பட்டுள்ளதுடன் புதையல் தோண்டுவதற்காக பூஜை வழிபாடுகளுக்கு பயன்படுத்தப்பட்ட பூஜை பொருட்கள் .மற்றும் புதையல் தோண்டுவதற்காக பயன்படுத்தப்பட்ட ஆயுதங்களும் கைப்பற்றப்படுள்ளதாக வவுணதீவு பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி பி .டி. நசிர் தெரிவித்தார்.
புதையல் தோண்டியதாக சந்தேகத்தின் பேரில் கைது கைதுசெய்யப்பட்டுள்ள ஐவரில் நான்கு பேர் கொக்கட்டிச்சோலை பகுதியை சேர்ந்தவர்கள் எனவும் மற்றையவர் பதுளை கிராந்திரகோட்டை பகுதியை சேர்ந்தவர் என பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி பி .டி. நசிர் தெரிவித்தார்
குறித்த சம்பவம் தொடர்பில் .கைதுசெய்யப்பட்டவர்கள் மற்றும் புதையல் தோண்டுவதற்காக பயன்படுத்தப்பட்ட ஆயுதங்கள் தொடர்பில் பொலிஸ் விசாரணைகளின் பின் மட்டக்களப்பு நீதவான நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பதவுள்ளதாக வவுணதீவு பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தெரிவித்தார்.
0102

Post a Comment

0 Comments