Ad Code


 

Ticker

6/recent/ticker-posts

மட்டக்களப்பு - களுதாவளை பிரதான வீதியில் இடம்பெற்ற விபத்தில் இளைஞன் ஸ்தலத்தில் பலி

மட்டக்களப்பு - களுதாவளை பிரதான வீதியில் இடம்பெற்ற விபத்தில் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்த இளைஞர் ஒருவர் சம்பவ இடத்தில் பரிதாபமாக பலியாகியுள்ளார்.
இந்தச் சம்பவம் இன்றைய தினம் (23) காலை இடம்பெற்றுள்ளதாக களுவாஞ்சிகுடி பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்த இளைஞர், முன்னே சென்ற பிக்கப் ரக வாகனத்தை முந்திச் செல்ல முற்பட்ட வேளையில் எதிர்கொண்டு வந்த இலங்கைப் போக்குவரத்துச் சபைக்குச் சொந்தமான பேருந்தில் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளார்.
இதேவேளை, சம்பவத்தில் உயிரிழந்தவர் களுதாவளையைச் சேர்ந்த 22 வயதுடைய ம.இதயராஜ் என பொலிஸாரினால் அடையாளம் காணப்பட்டுள்ளது.
தற்போது சடலம் களுவாஞ்சிகுடி ஆதார வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன், விபத்து தொடர்பில் மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Post a Comment

0 Comments