வெசாக் தினத்தை முன்னிட்டு ஜனாதிபதியின் பொதுமன்னிப்பின் அடிப்படையில் நாடளாவிய ரீதியில் சிறைக்கைதிகள் விடுதலைசெய்யப்பட்டுள்ளனர்.இலங்கையில் ஐக்கிய நாடுகள் சபையின் சர்வதேச வெசாக் தினம் அனுஸ்டிக்கப்பட்டுவரும் நிலையில் இந்த கைதிகள் விடுதலைசெய்யப்பட்டுள்ளனர்.
மட்டக்களப்பு சிறைச்சாலையில் இருந்து எட்டு கைதிகள் இன்று காலை சிறைச்சாலை அதிகாரிகள் முன்பாக விடுதலைசெய்யப்பட்டனர்.
சிறு குற்றங்களில் ஈடுபட்டு தண்டனை வழங்கப்பட்ட எட்டு சிறைக்கைதிகள் இவ்வாறு விடுதலைசெய்யப்பட்டனர்.
மட்டக்களப்பு சிறைச்சாலையின் அத்தியட்சகர் வை.எம்.எச்.அக்பர்,தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் சிறைச்சாலையின் பிரதான சிறைச்சாலை அதிகாரி என்.பிரபாகரன் உட்பட சிறைச்சாலை அதிகாரிகள் கலந்துகொண்டனர்.
0 comments: