முள்ளியவாய்கால் நினைவேந்தல் நிகழ்வின் 8 ஆம் ஆண்டு நினைவு நாள் நிகழ்வில் கலந்து கொண்ட எதிர்கட்சித் தலைவர் இரா.சம்மந்தன் அவர்கள் உரையாற்றிய போது அங்கு குழப்ப டிநிலை ஒன்று ஏற்பட்டுள்ளது.
முல்லைத்தீவு, முள்ளியவாய்கால் கிழக்கு பகுதியில் உள்ள நினைவுத் திடலில் முதலமைச்சரைத் தொடர்ந்து எதிர்கட்சித் தலைவர் இரா.சம்மந்தன் அஞ்சலி உரையாற்றியிருந்தார்.
இதன்போது அங்கு சோகங்களுடன் கூடியிருந்த மக்கள் இது அரசியல் பேசும் இடமல்ல. சம்மந்தன் ஐயா இங்கு உரையாற்ற தேவையில்லை என சிலர் சத்தமிட்டனர். இதன்போது எத்ர்கட்சித்தலைவர் தொடர்ந்து உரையாற்றினார். அப்போது பயங்கரவாத யுத்தத்தை முடித்ததாக நீங்கள் பாராளுமன்றத்தில் பாராட்டு தெரிவித்திருந்தீர்களே என ஊடகவியலாளர் ஒருவர் கேள்வி எழுப்பியதைத் தொடர்ந்து அங்கு பலரும் எதிர்கட்சித் தலைவருக்கு எதிராக பல்வேறு கருத்துக்களைக் கூறினார். இதனால் அவ்விடத்தில் சிறிது குழப்ப நிலை ஏற்பட்டதுடன் எதிர்கட்சித் தலைவரும் தனது உரைய சுருக்கமாக நிறுத்திக் கொண்டமை குறிப்பிடத்தக்கது.
0 comments: