Ad Code

Responsive Advertisement

Ticker

6/recent/ticker-posts

இலங்கை செல்ல அகதிகள் ஆசை குவியும் விண்ணப்பங்கள்

இலங்கை அகதிகள், தங்கள் நாட்டிற்கு செல்ல விருப்பம் தெரிவித்து, அதிகளவில் விண்ணப்பித்துவருகின்றனர். 119 முகாம்கள்இலங்கையில், 1983ல், உள்நாட்டு போர் துவங்கியதில் இருந்து அகதிகள் இந்தியா வரத் துவங்கினர். தமிழகத்தில், 119 முகாம்களில், 67 ஆயிரம் பேர் தங்கியுள்ளனர்.
இதுதவிர, போலீசார் அனுமதியுடன், 30 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் வேலை நிமித்தமாக வெவ்வேறு இடங்களில் உள்ளனர். 2009 மே மாதம், உள்நாட்டு போர் முடிவுக்கு வந்ததும், ஒரே சமயத்தில், 5,000 பேர் இலங்கைக்கு சென்றனர். வேலைவாய்ப்புதற்போது, இலங்கையில் வசிப்பதற்கு ஏற்ற சூழல் நிலவுவதாலும், அதிகளவில் வேலைவாய்ப்பு கிடைப்பதாலும், தங்கள் சொந்த நாட்டிற்கு செல்ல, அகதிகள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.
சமீபத்தில், 46 பேர் இலங்கைக்கு சென்றனர். அதே போல், ஏராளமானோர் தங்கள் நாட்டிற்கு செல்ல தொடர்ந்து விண்ணப்பம் அளித்து வருகின்றனர். இதில், 2006க்கு பின் வந்தோர் தான், தாயகம் செல்ல அதிக ஆர்வம் காட்டுகின்றனர்

Post a Comment

0 Comments