இந்தியாவை சேர்ந்த காது மூக்கு,தொண்டை வைத்திய நிபுணர்களின் இலவச ஜந்துநாள் வைத்திய முகாம் இன்று 26ம் திகதி வெள்ளிக்கிழமை கல்முனை ஆதார வைத்தியசாலையில் ஆரம்பமாகியது.
கொழும்பு, கல்முனை ரொட்டரி கிளையின் (ROTARY CLUB) அனுசரணையுடன் தொடர்ந்து 5தினங்கள் நடைபெறவிருக்கும் காது மூக்கு தொண்டை தொடர்பாக சிகிச்சைகள் இன்றுஆரம்பமாகின.
கல்முனை ஆதார வைத்தியசாலையின் வைத்தியஅத்தியட்சகர் டாக்டர் இரா.முரளீஸ்வரன் தலைமையில் வைத்தியமுகாம் அங்குரார்ப்பணவைபவம்இன்று காலை வைத்தியசாலையில் நடைபெற்றது.
இவ்வைபவத்தில் இந்தியவைத்திய நிபுணர்கள் கலந்தகொண்டார்கள்.வத்தியசாலை வைத்தியர்கள் தாதியபரிபாலகிகள் ஊழியர்கள் மற்றும் றோட்டரி பிரதிநிதிகளும் கலந்து கொண்டனர்.
அங்குரார்ப்பண பைவவம் முடிந்தகையோடு இந்தியவைத்தியநிபுணர்கள் சிகிச்சைகளை ஆரம்பித்தனர்.
சிகச்சை பெற விரும்புபவர்கள் ஏலவே கல்முனை ஆதார வைத்தியசாலை வரவேற்பு கரும பீடத்தில் தங்களது பெயர், தொடர்பு கொண்டு தொலைபேசி இலக்கம் என்பவற்றை பதிவுசெய்திருந்தகாரணத்தினால் இன்று 200பேர்சிகிச்சைபெற்றனர்.
Home »
எமது பகுதிச் செய்திகள்
» கல்முனையில் இந்தியவைத்தியநிபுணர்களின் 5நாள் வைத்தியமுகாம் ஆரம்பம்!
கல்முனையில் இந்தியவைத்தியநிபுணர்களின் 5நாள் வைத்தியமுகாம் ஆரம்பம்!
Labels:
எமது பகுதிச் செய்திகள்
Subscribe to:
Post Comments (Atom)
0 comments: