பிரான்ஸ் தலைநகர் பாரிசில் இடம்பெற்ற தாக்குதல் ஓன்றில் பொலிஸ் உத்தியோகத்தர் ஓருவர் கொல்ப்பட்டுள்ளதுடன் இருவர் படுகாயமடைந்துள்ள அதேவேளை இரு பயங்கரவாத தாக்குதல் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இதேவேளை தாக்குதலை மேற்கொண்ட நபரை காவல்துறையினர் சுட்டுக்கொன்றுள்ளனர்.
சோமப்ஸ் எலிசே என்ற பகுதியல் இந்த தாக்குதல் இடம்பெற்றுள்ளது. நபர் ஓருவர் துப்பாக்கி பிரயோகத்தை மேற்கொண்டுவிட்டு தப்பியோடியுள்ளார் என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
பிரான்ஸ் ஜனாதிபதியும் இது பயங்கரவாத தாக்குதல் என குறிப்பிட்டுள்ள அதேவேளை ஐஎஸ் அமைப்பு தனது உறுப்பினர் ஓருவர் இந்த தாக்குதலை மேற்கொண்டதாக குறிப்பிட்டுள்ளது.
கார் ஓன்றில் வந்த நபர் ஓருவர் அதிலிருந்து இறங்கி துப்பாக்கிபிரயோகத்தை மேற்கொண்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
ஓரு காவல்துறை உத்தியோகத்தர் மீது துப்பாக்கிபிரயோகத்தை மேற்கொண்டு விட்டு தப்பியோட முயன்றவேளை அந்த நபர் வேறு இரு காவல்துறையினர் மீது துப்பாக்கிபிரயோகத்தை மேற்கொண்டார் எனவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.
அதன் பின்னர் அவர் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ள அதிகாரிகள் குறிப்பிட்ட நபர் இனம் காணப்பட்டுள்ளார் என தெரிவித்துள்ளனர்.
0 Comments