Ad Code


 

Ticker

6/recent/ticker-posts

அலப்போவில் யுத்தகுற்றங்களில் சகலதரப்பும் ஈடுபட்டதாக ஐநா குற்றச்சாட்டு

அலப்போவை கைப்பற்றுவதற்காக கடந்த வருடம் இடம்பெற்ற மோதல்களின் போது சம்மந்தப்பட்ட சகல தரப்பினரும் பொதுமக்கள் மீது யுத்தகுற்றங்களை புரிந்துள்ளதாக ஐக்கியநாடுகள் விசாரணையாளர்கள் தெரிவித்துள்ளனர்
சிரியா குறித்த ஐக்கியநாடுகள் மனித உரிமை ஆணைக்குழுவின் விசாரணையாளர்கள் நூற்றுக்கும் மேற்பட்ட பொதுமக்களுடன் நடத்திய பேச்சுக்கள் மற்றும் செய்மதிபுகைப்பட ஆதாரங்கள் என்பனவற்றை ஆதாரமாக வைத்து இந்த அறிக்கையை வெளியிட்டுள்ளனர்.
சிரிய அரசாங்கமும் அதன் ரஸ்ய சகாக்களும் நாளாந்தம் மேற்கொண்ட தாக்குதல்களால் நூற்றுக்கணக்கான மக்கள் கொல்லப்பட்டனர்,அரச படையினர் குளோரின் குண்டுகளை வீசினர் இதிலும் பல பொதுமக்கள் கொல்லப்பட்டனர் என அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அரசபடையினரின் கட்டுப்பாட்டு பகுதியை நோக்கி கிளர்ச்சிக்காரர்கள் கடும் பீரங்கி தாக்குதலை மேற்கொண்டனர் மக்களை மனிதக்கேடயங்களாக வைத்திருந்தனர் எனவும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Post a Comment

0 Comments