மாலபே தனியார் வைத்திய கல்வி வழங்கும் நிறுவனத்தினை அரசுடைமையாகுமாறு அரசினை வலியுறுத்தும் முகமாக இன்று (02.03) காலை 8.00 மணி தொடக்கம் நாளை (03.03) காலை 8.00மணி வரை 24 மணி நேர வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இதன்காரணமாக, வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையில் வெளிநோயாளர் பிரிவு மற்றும் கிளினிக் சேவைகள் முழுமையாக இயங்கவில்லை. நோயாளர்கள் பலரும் வைத்தியசாலைக்கு வந்து திரும்பிச் செல்வதை அவதானிக்க முடிகிறது.
இதேவேளை, அவசர சிகிச்சைப் பிரிவு மற்றும் விடுதிகளின் சேவைகள் இடம்பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.





0 Comments