மின்சாரத்தை சிக்கனமாக பயன்படுத்துவது அனைவரினதும் பொறுப்பு என அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.
வழமையை விட ஒரு மின்விளக்கை அணைத்து வைப்பதே மின்சார சபைக்கு வழங்கும் உதவியாகும்.
டிசம்பர் மாதத்தை விட ஜனவரி மாத மின் கட்டணத்தை 10 வீதத்தால் குறைத்து கொள்பவர்களுக்கும், ஜனவரி மாதத்தை விட பெப்ரவரி மாதத்தின் கட்டணத்தை 10 வீதத்தால் குறைத்துக் கொள்பவர்களுக்கும் மின்சார சபை 10 வீத கழிவை வழங்கவுள்ளதாக மின்சக்தி அமைச்சர் ரஞ்ஜித் சியம்பலாப்பிட்டிய தெரிவித்துள்ளார்.
நாட்டில் காணப்படுகின்ற வறட்சியான காலநிலை காரணமாக நீர் பயன்படுத்தி தயாரிக்கப்படுகின்ற மின்சாரம் தயாரிப்புகள் எதிர்வரும் காலங்களிலும் மேலும் குறைவடையும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
எந்த சவால்கள் ஏற்பட்டாலும், மின்சாரம் தடை ஏற்படுத்தி மக்கள் மீது தேவையற்ற சுமைகள் சுமத்தப்படாதென அவர் மேலும் தெரிவித்துள்ளார்.


0 Comments