கடந்த 5 வருடத்தினுள் இலங்கையில் கிட்டத்தட்ட 4 இலட்சம் கிலோ கிராம் போதைப்பொருள் மீட்கப்பட்டுள்ளது.
இந்த குற்றச்செயலுடன் தொடர்புடைய குற்றவாளிகள் 3 லட்சத்து மூவாயிரம் பேர் பாதுகாப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
கடந்த வருடத்தில் மாத்திரம் போதைப்பொருள் குற்றவாளிகள் கிட்டத்தட்ட 80 பேர் பாதுகாப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். 6 ஆயிரத்து 800 கிலோ கிராம் போதைப்பொருளும் அவர்களிடம் இருந்து கைப்பற்றப்பட்டுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.
அதற்கமைய கஞ்சா பயன்படுத்தல், அருகில் வைத்திருத்தல் மற்றும் கஞ்சாவுடன் பயணித்தமை ஆகிய குற்றச்சாட்டுகளிலேயே அதிகமானோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
அந்த நபர்களின் எண்ணிக்கை 52 ஆயிரத்து 319 ஆகும். அவர்களிடம் இருந்து 6 ஆயிரத்து 569 கிலோ கிராம் கஞ்சா கைப்பற்றப்பட்டுள்ளது.
ஹெரோயினுடன் 2015 ஆம் ஆண்டு 26 ஆயிரத்து 468 பேர் பாதுகாப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். அதற்கமைய 67 கிரோகிராம் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளது.
2014ஆம் ஆண்டு போதைப்பொருள் குற்றம் தொடர்பில் பாதுகாப்பு பிரிவினரால் 7 ஆயிரம் பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அத்துடன் 20 ஆயிரம் கிலோ கிராம் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளது.
இதேவேளை, கடந்த 5 வருட காலப்பகுதியில் இலங்கையில் 3 லட்சத்து 86 ஆயிரத்து 500 கிலோ கிராம் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளதாக பாதுகாப்பு பிரிவினால் தெரிவிக்கப்பட்டுள்ளது
0 Comments