வருடாவருடம் இடம்பெற்று வரும் திருப்பள்ளி எழுச்சி திருவெம்பாவை ஊர்வலமானது இம்முறையும் சிறப்பான முறையில் இடம்பெற இறை அருள் கூடியுள்ளது. அந்தவகையில் எதிர்வரும் 02.01.2016ஆம் திகதி திருவெம்பாவை ஊர்வல நிகழ்வுகள் இடம்பெறவுள்ளன. அதிகாலை 3.30 மணிக்கு சரியாக ஆரம்பமாகி 5.40 ற்கு நிறைவு பெறும் வகையில் ஏற்பாடாகியுள்ளது. அனைவரும் பிரம்ம முகூர்த்த வேளையாம் அதிகாலை வேளையில் ஆலய வழிபாட்டில் ஈடுபடுவதுடன் இவ் ஊர்வலத்திலும் கலந்து கொண்டு எல்லாம் வல்ல சிவ பெருமானின் அருளைப் பெறுமாறு அன்புடன் அழைக்கின்றார்கள் தேற்றாத்தீவு கொம்புச்சந்திப்பிள்ளையார் ஆலய பரிபாலனசபையினர்.திருப்பள்ளி எழுச்சி ஊர்வலமானது அதிகாலை3.30 மணியளவில் தேற்றாத்தீவு கொம்புச்சந்திப்பிள்ளையார் ஆலயத்தில் இருந்து ஆரம்பமாகும்.
0 Comments