Ad Code

Responsive Advertisement

Ticker

6/recent/ticker-posts

ட்ரம்பு மற்றும் மைத்திரிக்கு இடையில் சந்திப்பு...! பரபரப்பாகும் கொழும்பு அரசியல்

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் அமெரிக்காவின் புதிய ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டுள்ள டொனால்ட் ட்ரம்பு ஆகியோருக்கும் இடையில் சந்திப்பு ஒன்று இடம்பெறவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த சந்திப்பு எதிர்வரும் மார்ச் மாதம் ஜெனிவாவில் இடம்பெறவுள்ள மனித உரிமைகள் ஆணைக்குழு மாநாட்டிற்கு முன்னதாக இடம்பெறும் என எதிர்ப்பார்க்கப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கொழும்பு ஊடகம் ஒன்று வெளியிட்டுள்ள செய்தியில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், இலங்கை எதிர்நோக்கியுள்ள மிக முக்கிய சவால்கள் குறித்து இந்த சந்திப்பில் கலந்துரையாடப்படவுள்ளதாக அந்த செய்தியில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனிடையே, இலங்கையில் இடம்பெற்றதாக கூறப்படும் யுத்தக்குற்றச்சாட்டுகள் தொடர்பில் எதிர்வரும் மார்ச் மாதம் ஜெனிவாவில் இடம்பெறவுள்ள மனித உரிமைகள் மாநாட்டின் போது கலந்துரையாடப்படவுள்ளது.
எனினும், இலங்கையின் யுத்தக் குற்றம் மற்றும் மனித உரிமை மீறல் தொடர்பில் அமெரிக்காவின் இணை அனுசரனையில் ஐ.நாவில் நிறைவேற்றப்பட்ட பிரேரணை இரத்து செய்யுமாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கோரிக்கை விடுத்துள்ளார்.
இது குறித்த கடிதம் ஒன்றை அமெரிக்காவின் புதிய ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டுள்ள டொனால்ட் ட்ரம்பிற்கு அனுப்பி வைத்துள்ளதாகவும், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அண்மையில் தெரிவித்திருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Post a Comment

0 Comments