Ad Code

Responsive Advertisement

Ticker

6/recent/ticker-posts

இளம் தாயும் 7 வயது சிறுவனும் கிணற்றில் இருந்து சடலமாக மீட்பு: வவுனியாவில் சோகம்

வவுனியா, ஓமந்தைப் பகுதியில் உள்ள வீட்டுக் கிணறு ஒன்றில் இருந்து தாயும், மகனும் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக ஓமந்தைப் பொலிசார் தெரிவித்துள்ளனர்.
இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
வவுனியா, ஓமந்தை, பன்றிக்கெய்தகுளம் வீதியில் அமைந்துள்ள வீட்டுக் கிணற்றில் இருந்து இளம் தாய் ஒருவரும் அவரது 7 வயது மகனும் சடலமாக மீட்கப்பட்டுளளனர்.
குறித்த வீட்டில் வசித்து வந்த குறித்த தாயின் மாமியார் கிராம அலுவலர் அலுவலகத்திற்கு சென்றுள்ளார். மாமனார் வீட்டின் அருகில் உள்ள தோட்டத்தில் வேலை செய்து கொண்டு நின்றுள்ளார். கணவன் வேலை நிமிர்த்தம் கிளிநொச்சிக்கு சென்றிருந்தார்.
Video Player
இதன்போது குறித்த தாயும், மகனும் தொலைக்காட்சி பார்த்துக் கொண்டிருந்துள்ளனர். கிராம அலுவலர் அலுவலகத்திற்கு சென்ற மாமியார் காலை 11 மணியளவில் சிறுவனுக்கு ஜெலி வாங்க்கி கொண்டு வீட்டிற்கு வந்து பார்த்த போது தாயையும், மகனையும் காணவில்லை. இதனையடுத்து அவர்களை தேடிய போதே அவர்களது சடலம் வீட்டில் இருந்த கிணற்றில் காணப்பட்டுள்ளது.
இதனையடுத்து ஓமந்தைப் பொலிசாருக்கு தகவல் வழங்கப்பட்டது. சமபவ இடத்திற்கு வந்த பொலிசார் சடலத்தை மீட்டுள்ளனர். இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டவர்கள் அப்பகுதியைச் சேர்ந்த சதீஸ்வரன் சுதாசினி (வயது 30), சதீஸ்வரன் டினோஸன் (வயது 07) என்பவர்களாவர்.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை ஓமந்தைப் பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.
இதேவேளை, கடந்த வியாழக் கிழமையே (29.12.2016) குறித்த சிறுவன் தனது 7வது பிறந்த தினத்தை கொண்டாடியிருந்தமை குறிபபிடத்தக்கது.

IMG_1504IMG_1502
IMG_1468IMG_1476

Post a Comment

0 Comments