மட்டக்களப்பு - பேத்தாழை பகுதியில் இளைஞர் ஒருவர் தற்கொலை செய்து கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
பேத்தாழை கருங்காலிச்சோலை பாடசாலை வீதியை சேர்ந்த பேரின்பம் ததீஸ்குமார் (வயது 16) என்பவரே இவ்வாறு தற்கொலை செய்து கொண்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
குறித்த இளைஞனை சிகிச்சைகளுக்காக வாழைச்சேனை ஆதார வைத்தியசாலையில் அனுமதிப்பட்ட போதும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.
மேலும், சடலம் வாழைச்சேனை ஆதார வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதோடு, பிரேத பரிசோதனையின் பின் உறவினர்களிடம் ஒப்படைக்கப்படவுள்ளது.


0 Comments