இன்று நள்ளிரவு முதல் தபால் பணியாளர்கள் தொழிற்சங்கப் போராட்டமொன்றில் குதிக்கத் தீர்மானித்துள்ளனர்.
தமது கோரிக்கைகளுக்கு உரிய பதிலளிக்கப்படாத காரணத்தினால் திட்டமிட்டவாறு இன்று நள்ளிரவு முதல் தொழிற்சங்கப் போராட்டம் நடத்தப்படும் என தபால் தொழிற்சங்கங்களின் ஒன்றிய அழைப்பாளர் சின்தக பண்டார தெரிவித்துள்ளார்.
தொழிற்சங்கப் போராட்டம் குறித்து நேற்று ஊடகங்களுக்கு அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.இதன்படி இன்று நள்ளிரவு முதல் தபால் அலுவலகங்கள் அனைத்தும் எதிர்வரும் 48 மணித்தியாலங்களுக்கு மூடப்பட்டிருக்கும்.
தபால் அமைச்சர் எம்.எல்.ஏ.எம். ஹாலீமுடன் நடத்திய பேச்சுவார்த்தைகள் தோல்வியடைந்த காரணத்தினால் போராட்டம் நடத்தப்பட உள்ளது.
இன்று முதல் 21ம் திகதி நள்ளிரவு வரையில் தபால் திணைக்கள தொழிற்சங்கப் போராட்டம் முன்னெடுக்கப்படும். தபால் திணைக்களத்தின் அனைத்து விதமான சேவைகளையும் இடைநிறுத்திப் போராட்டம் நடத்தப்பட உள்ளது என அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை, பண்டிகைக் காலத்தில் தொழிற்சங்கப் போராட்டம் நடத்தாது பேச்சுவார்தை மூலம் பிரச்சினைகளுக்கு தீர்வு காண முயற்சிக்கப்பட வேண்டுமென ஊழியர்களிடம் கோருவதாக தபால் மற்றும் முஸ்லிம் சமய விவகார அமைச்சர் ஹாலீம் தெரிவித்துள்ளார்.
0 Comments