நாட்டில் தற்போது நிலவி வரும் காலநிலையால் நீர்ப் பற்றாக்குறை ஏற்படும் என வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.
மேலும், நீர் பற்றாக்குறை பெப்ரவரி மாதம் வரை தொடரும் என எதிர்பார்க்கப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.
வறட்சி நிலவி வருகின்றமையால் நீர்ப் பற்றாக்குறை அதிகரித்து வருவதாக வளிமண்டலவியல் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் லலித் சந்திரபால தெரிவித்துள்ளார்.
இலங்கையில் 2016 ஆம் ஆண்டில் முறையற்ற மழை பொழிவு ஏற்பட்டமையினால் நீர்த்தேக்கங்கள் மற்றும் நீர் வளங்களில் நீர்ப் பற்றாக்குறைக்கு வழிவகுத்தது என்றும் லலித் சந்திரபால கூறியுள்ளார்.
0 Comments