Ad Code

Responsive Advertisement

Ticker

6/recent/ticker-posts

உலகை உலுக்கிய விமான கடத்தல்கள்

மனிதனின் போக்குவரத்து தேவைகளை இலகுப்படுத்துவதற்காக கண்டுபிடிக்கப்பட்ட போக்குவரத்து சாதனங்களுள் ஒன்றுதான் விமானம். வாகனங்களில் பயணம் செய்வதனை விட விமானங்களில் பயணம் செய்வதுதான் பலரின் கனவாக இருக்கும்.
ஆனால் அண்மைக்காலங்களில் விமானங்கள் தொடர்பாக வெளிவரும் செய்திகளைப் பார்த்தால் விமானப் பயணமே பலருக்கு அதிர்ச்சியை எற்படுத்தியிருக்கும்.
குறிப்பாக விமானங்கள் காணாமல் போவதும், விமானக் கடத்தல்களும், விமான விபத்துகளும் அண்மைக்காலமாக அதிகரித்த வண்ணமே உள்ளன. அந்த வகையில் உலகையே உலுக்கிய சில விமான கடத்தல்களைப் பற்றி தெரிந்துக் கொள்வோம்.
உலகம் முழுவதும் பல மோசமான விமான கடத்தல் சம்பவங்கள் நடந்துள்ளன. உலகின் முதல் விமானக்கடத்தல் தென் அமெரிக்க நாடான பெருவில் 1931ம் ஆண்டு நடைபெற்றது.
1932ம் ஆண்டு பிரேசில் நாட்டிற்குச் சொந்தமான விமானம் கடத்தப்பட்டது. 1931ம் ஆண்டிலிருந்து 1948ம் ஆண்டு வரை 9 வருட காலத்தில் 15 விமான கடத்தல் சம்பவங்கள் இடம் பெற்றுள்ளன.
1958ம் ஆண்டு முதல் 1967ம் ஆண்டு வரை உலகில் 48 விமான கடத்தல் சம்பவங்கள் நடைபெற்றுள்ளன. 1969 ஆம் ஆண்டுதான் உலக வரலாற்றில் மிக அதிகமான விமானக் கடத்தல்கள் இடம்பெற்ற ஆண்டாக பதியப்பட்டுள்ளது.
அந்த ஆண்டு மட்டும் 82 விமானங்கள் கடத்தப்பட்டுள்ளன. 1976ல், 300 பயணிகளுடன் பறந்த ஏர் பிரான்ஸ் விமானம் ஒன்று தீவிரவாதிகளால் கடத்தப்பட்டது. விமானத்தை விடுவிக்க மறுத்து, தீவிரவாதிகளுக்கு உதவி செய்தார், இடி அமீன்.
இஸ்ரேலிய கமாண்டோ படையினர் விமானத்தில் வந்து அதிரடி தாக்குதல் நடத்தி 7 தீவிரவாதிகளையும், 20 உகண்டா ராணுவத்தினரையும், சுட்டுக் கொன்றுவிட்டு, 300 பிரயாணிகளையும் பத்திரமாக மீட்டனர்.
இடி அமீனின் போக்கை உலக நாடுகள் கண்டித்தன. 1986ம் ஆண்டு பான் ஆம் 73 ரக விமானம் பாகிஸ்தானின் கராச்சியில் இருந்து ப்ராங்பர்ட் கிளம்பியது. இந்த விமானம் தீவிரவாதிகளால் கடத்தப்பட்டது.
இந்த விமான கடத்தலில் பயணிகளை தடுக்க முயன்ற பணிப்பெண் கொல்லப்பட்டார். கடந்த 1999ம் ஆண்டு டிசம்பர் 24 ஆம் திகதி இந்தியன் ஏர்லைன்ஸ் ஐசி 814 விமானத்தை பாகிஸ்தான் தீவிரவாதிகள் கடத்தினர்.
ஆப்கானிஸ்தானின் காந்தகார் விமான நிலையத்தில் விமானத்தை தரையிறக்கினர். பின்னர் 3 முக்கிய தீவிரவாதிகளை விடுவித்து விமானத்தை மீட்டு வந்தனர்.
இந்நிலையில் 2001ம் ஆண்டு செப்டம்பர் 11ம் அமெரிக்காவின் கருப்பு நாளாக அமைந்தது.
நான்கு ஜெட் விமானங்களை அல் கொய்தா தீவிரவாதிகள் கடத்தினர். தீவிரவாதிகள் இரண்டு விமானங்களை நியூயோர்க்கின் இரட்டை கோபுரம் மீது அடுத்தடுத்து மோத விட்டனர். இதில் இரண்டு மணி நேரங்களில் இரு பிரமாண்ட கட்டடங்களும் சாம்பலாகி மண்ணோடு மண்ணாக சிதைந்து போனது.
இன்னொரு விமானம் பென்டகன் மீது மோதியது. நான்காவது விமானம், ஷாங்க்ஸ்வில்லி என்ற இடத்தில் கீழே விழுந்து நொறுங்கியது. இந்த அதி பயங்கர தாக்குதல்களில் கிட்டத்தட்ட 5000 பேர் உயிரிழந்தனர். இதுவே உலகின் மோசமான விமான கடத்தலாகும்.
இந்த சம்பவத்திற்குப் பின்னர் விமான நிலையங்களில் பல்வேறு பாதுகாப்பு நடவடிக்கைகளை அமெரிக்கா மேற்கொண்டு வருகிறது.
உலகம் முழுவதும் விமான நிலையங்களில் தீவிரவாத நடவடிக்கைகளை தடுக்க பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டாலும் அவ்வப்போது விமான கடத்தல் சம்பவங்கள் நடைபெற்றுக்கொண்டுதான் இருக்கிறது.
இந்நிலையில் லிபிய வான்பரப்பில் வைத்து விமானமொன்று நேற்றைய தினம் கடத்தப்பட்டுள்ளது. இதன்போது 118 பயணிகள் விமானத்தில் இருந்துள்ளனர். விமானத்தை கடத்தியதன் பேரில் 2 தீவிர வாதிகள் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளதோடு அதில் பயணித்த அனைத்து பயணிகளும் பாதுகாப்பாக மீட்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
இனிவரும் காலங்களில் விமானப் பயணம் என்பது மனித உயிருக்கு உத்தரவாதம் இல்லாத ஒரு பயணமாக மாற போகின்றது என்பது மட்டும் தான் தற்போதைக்கு உண்மை.

Post a Comment

0 Comments