Ad Code

Responsive Advertisement

Ticker

6/recent/ticker-posts

மண்முனைப்பற்றில் மூன்று மதுபானசாலைகளை மூட தீர்மானம்

மட்டக்களப்பு மாவட்டத்தின் மண்முனைப்பற்று பிரதேசத்தில் உள்ள மூன்று மதுபானசாலைகளின் அனுமதியை ரத்துச்செய்வது என தீர்மானிக்கப்பட்டுள்ளது.
பொதுஅமைப்புகள் விடுத்தவேண்டுகோளின் அடிப்படையில் இந்த தீர்மானம் நேற்று (16) எடுக்கப்பட்டுள்ளது.
கடந்தகால ஆட்சியின்போது சட்ட நடைமுறைகளுக்கு அப்பால் இந்த மதுபானசாலைகள் இங்கு கொண்டுவரப்பட்டுள்ளதாகவும் பொது அமைப்புகள் இங்கு சுட்டிக்காட்டின.
இந்த கூட்டத்தின்போது மண்முனைப்பற்றில் உள்ள மூன்று மதுபானசாலைகளை மூடுவதற்கு நடவடிக்கையெடுக்கவேண்டும் என்ற கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டன. மேலும் ஆரையம்பதியின் பிரதான வீதியில் உள்ள காந்தன் மதுபானசாலைகளினால் அப்பகுதி மக்கள் பெரும் அசௌகரியங்களை எதிர்நோக்கிவருவதாக இங்கு தெரிவிக்கப்பட்டது
இங்கு கருத்து தெரிவித்த கிழக்கு மாகாணசபையின் பிரதி தவிசாளர் பிரசன்னா இந்திரகுமார்,
சட்டதிட்டங்களுக்கு முரணாக செயற்படும் மதுபானசாலைகள் தொடர்பில் மதுவரித் திணைக்களம் உரிய நடவடிக்கையினை எடுக்கவேண்டும்.
அவர்களுக்கு அது தொடர்பில் சட்ட நடவடிக்கையெடுப்பதற்கான அதிகாரம் உள்ளது.
ஒரு ஆலயம் மதுபானசாலையை வழங்குமாறு பிரதேச செயலாளருக்கு கடிதம் வழங்கியுள்ளதாக நான் அறிகின்றேன்.
கலை கலாசாரத்தியையும் பண்பாட்டினையும் வளர்க்கும் இடமாக ஆலயம் இருக்கின்றது. அந்த ஆலயங்களில் ஒன்று மதுபானசாலைக்கு ஆதரவாக கடிதம் வழங்குவது என்றால் நாங்கள் வெட்கப்படவேண்டிய நிலையில் உள்ளோம்.
மண்பற்றுள்ள மதுவரித்திணைக்களத்தை சேர்ந்தவர்கள் இது தொடர்பிலான நடவடிக்கையினை எடுக்கவேண்டும். மண்முனைப்பற்றில் உள்ள பல மதுபானசாலைகள் வேறு மாவட்டங்களுக்குரிய மதுபானசாலைகளாக உள்ளன.
பிற மாவட்டங்களில் இருந்தபோது மதுகுருமார், பொதுமக்கள் போராட்டம் நடாத்தி தடைசெய்ததை இங்கு கொண்டுவந்துள்ளனர். மக்கள் இது தொடர்பில் விழிப்பாக இருந்திருந்தால் இவ்வாறான மதுபானசாலைகளை இங்கு அனுமதித்திருக்கமுடியாது.
பொதுமக்கள் ஒன்றுதிரண்டு ஒற்றுமையாக தமது எதிர்ப்பினை தெரிவிக்கும்போது மதுபானசாலைகளை நிறுத்தமுடியும்.
கடந்த காலத்தில் இருந்து அரசியல்வாதிகள் மேற்கொண்ட தவறான செயற்பாடுகளே மட்டக்களப்பில் மதுபானசாலைகள் அதிகரிப்பதற்கான காரணமாகும் என்றார்.
இங்கு கருத்து தெரிவித்த மண்முனைப்பற்று பிரதேச ஒருங்கிணைப்புக்குழுவின் இணைத்தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ஞா.சிறிநேசன்,
மட்டக்களப்பு மாவட்டத்திற்கு அப்பால்பட்ட பகுதிக்கான மதுபானசாலைக்கான அனுமதியைக்கொண்டு கூட மட்டக்களப்பு மாவட்டத்தில் மதுபானசாலைகள் கொண்டுவரப்பட்டுள்ளன.
மண்முனைப்பற்றில் மூன்று மதுபானசாலைகள் தொடர்பில் பொதுஅமைப்புகளினால் முறைப்பாடு எமது அபிவிருத்திக்குழுவிடம் வழங்கப்பட்டுள்ளது. ஆரையம்பதி, கிரான்குளம்,புதுக்குடியிருப்பு ஆகிய பகுதிகளில் உள்ள மூன்று மதுபானசாலைக்கு எதிராக முறைப்பாடு வழங்கப்பட்டுள்ளது.
இந்த மதுபானசாலைகள் மக்களுக்கு இடைஞ்சலாக இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு ஆதரவு வழங்குவது வேதனைக்குரிய விடயம். ஆலயங்கள் மதுவை ஒழிக்கும் பணியை முன்னெடுக்கவேண்டும் என்பதே அதற்குரிய கடமையாகும். ஆனால் ஆலயம் மதுபானசாலைக்கு அங்கீகாரம் வழங்குவது வெட்கப்படவேண்டிய விடயமாகவே உள்ளது.
குறித்த மூன்று மதுபானசாலைகளும் மட்டக்களப்பு மாவட்டத்திற்கு வெளி பிரதேசத்திற்குரிய மதுபானசாலைகள் என்ற காரணத்தினால் அதன் அனுமதியை அடுத்த ஆண்டுக்கு புதுப்பித்து வழங்கவேண்டாம் என்பது இந்த பிரதேச அபிவிருத்திக்குழுவின் தீர்மானமாகும்.
இதனைவிட மட்டக்களப்பு மாவட்டத்தில் 57 மதுபானசாலைகள் உள்ளதாக சொல்லப்படுகின்றது. மதுபானசாலைகளை இயன்றளவு குறைப்பதன் மூலமே எதிர்காலத்தில் வறுமையினை குறைக்கமுடியும்.
மாணவர்கள் கூட இன்று மதுபானத்திற்கு அடிமையாகும் நிலைமையேற்பட்டுள்ளது. விபத்துக்களும் இந்த மதுபாவனையினால்தான் அதிகமாக நடைபெறுகின்றன.எனவே மண்முனைப்பற்றில் பொதுமக்களினால் முறைப்பாடு தெரிவிக்கப்பட்டுள்ள குறித்த மூன்று மதுபானசாலைகளுக்குமான அடுத்த ஆண்டு அனுமதியை புதுபித்துவழங்கவேண்டாம் என்ற தீர்மானத்தை பிரதேச செயலாளரிடம் தெரிவித்துக்கொள்கின்றோம்.
இந்த மீளாய்வுக்கூட்டத்தில் கிழக்கு மாகாண விவசாய அமைச்சர் கி.துரைராஜசிங்கம்,பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.வியாழேந்திரன்,கிழக்கு மாகாணசபை உறுப்பினர்க

Post a Comment

0 Comments