Ad Code


 

Ticker

6/recent/ticker-posts

எமது நாட்டின் நீதி அமைச்சர் இந்த நாட்டில் நீதியை நிலைநாட்டுவாரா? பா.அரியநேத்திரன்

எமது நாட்டின் நீதி அமைச்சர் இந்த நாட்டில் நீதியை நிலைநாட்டுவாரா? என்ற சந்தேகம் எமது மக்கள் மத்தியில் இன்று எழுந்துள்ளது என முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் பா.அரியநேத்திரன் தெரவித்தார்
இன்று ஞாயிற்றுக்கிழமை காலை முதல் முதல் கொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர் கணபதிப்பிள்ளை தேவராசாவின் 31 வது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு ஆலையடிவேம்பு கலாசார மண்டபத்தில் அம்பாரை மாவட்ட தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியத்தின் ஏற்பட்டில் நடைபெற்றது இதில் அதிதியா அம்பாரை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கோடீஸ்வரன், மாகாணசபை உறுப்பினர் கலையரசன் ஆகியோர் கலந்து கொண்டனர் இந் நிகழ்வில் அதிதியாக கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்
இலங்கை போராட்ட வரலாறு என்பது ஊடகவியலாளர்களை இலக்கு வைத்து தாக்குதல்கள் நடத்தப்பட்ட காலகட்டமாகத்தான் இருந்து வருகின்றது. 1958 காலப்பகுதியில் தந்தை செல்வா அகிம்சை வழியில் போராடிக் கொண்டு இருந்த காலகட்டமாகும் இக் காலகட்த்திலும் ஊடகத்திற்கான அச்சுறுத்தல் நடை பெற்றிருந்தது அதாவது சுதந்திரன் பத்திரிக்கை தடைப்பட்டு இருந்தது.
ஆனால் தேவராசா அவர்கள் படுகொலை செய்யபப்பட்ட காலமானது 1985 ஆண்டு காலப்பகுதியாகும் இக் காலப்பகுதி என்னபது ஆயுதப் போராட்டத்திற்கான காலப்பகுதியாகும் இந்தப் பகுதியில் தமிழரின் நீதியான உண்மையான விடயங்களை வெளிக் கொணர கூடாது என்பதற்காகவே இந்த சிறிலாங்காக இராணுவம் இவ் ஊடகவியலாளரை கொலை செய்திருக்கலாம்.
விடுதலைப் புலிகள் தமது போராட்டங்களை ஐந்து வகையாக பிரித்து போராட்டங்களை நடாத்தியிருந்தனர். அதில் ஒரு முறையான கொரிலா போர் முறையினை ஆரம்பித்த காலமாக இக்காலம் காணப்படுகின்றது. இக் காலத்தில் தமிழ் இளையுஞர்கள் உள் அழைத்து செல்லப்பட்டால் உயிருடன் வெளிவரா முடியாத முகம் ஒன்றாக கொண்டவெட்டுவான் இராணுவ முகாம் அமைந்து காணப்பட்டமை உலகறிந்த உண்மையாகும், இந்த முகாமுக்கு அழைத்து செல்லப்பட்டே ஊடக வியலாளர் தேவராசாவும் கொலை செய்யப்பட்டுள்ளார்.
எனவே இக்காலப்பபகுதியில் தமிழரின் பிரச்சினைகள் வெளிவந்தால் தங்களுக்கு ஆபத்தாகிவிடும் என்பதற்காகவே திட்டமிட்டு இந்த ஊடகவியலாளரின் கொலை இடம் பெற்றுள்ளது.
முப்பத்தொரு வருடங்கள் மறைந்துகிடந்த இந்த ஊடகவியலாளரின் படுகொலை தற்போது வெளிக் கொரணப்பட்டுள்ளது என்றால் அது நல்ல விடயம் ஒன்றாகும் தற்காலத்திலும் உடகவியலாளர்கள் கொலை செய்யப்பட விட்டாலும் அச்சுறுத்தல்கள், ஊடகவியலாளர்களை இனவாதிகளாக சித்தரிக்கின்ற தன்மை தற்போது இடம் பெற்றுக் கொண்டுதான் இருக்கின்றது.
நாட்டில் நீதியை நிலைநாட்டுகின்ற நீதி அமைச்சர் இந்த நாட்டில் நீதியினை நிலைநாட்டுவதற்காக செயற்பட்டுக் கொண்டு இருக்கின்றாரா? ஏன்ற கேள்வி தற்போது அனைவரின் மத்தியில் எழுந்துள்ளது. காரணம் அண்மையில் மட்டக்கப்புக்கு விஜயம் ஒன்றினை மேற் கொண்டிருந்த நீதி அமைச்சர் அண்மைக்காலமாக இன முரண்பாடுகளை ஏற்படுத்தும் வகையில் செற்பட்டுக் கொண்டு இருக்கும் புத்த பிக்கு ஒருவருக்கு நற்சான்றிதழ் வழங்கி செற்றுள்ளார்.
அதாவது மட்டக்களப்பில் சிங்கள மக்களின் குரலாக புத்த பிக்குவின் குரல் ஒலித்துக் கொண்டு இருப்பதாக கூறியிருக்கின்றமை மதக் கொள்கையினை நிலை நாட்டுகின்ற ஒருவர் மாக்கள் பிரதிநிதிகளின் வேலையை செய்வதற்கு வழிவகுத்துள்ளது. அது மாத்திரமின்றி ஒரு பொய்யினையும் கூறி சென்றுள்ளார். அதாவது யுத்த காலத்திற்கு முன்னர் 28000 சிங்கள மக்கள் மட்டக்களப்பில் வாழ்ந்ததாக கூறியிருக்கின்றார். புள்ளி விபரத்தின்படி 1981 ஆண்டு 10604 மக்களே இங்கு வாழ்ந்துள்ளனர்.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினராகிய நாங்கள் சிங்கள மக்கள் மட்டக்களப்பில் வாழ்ந்துள்ளனர் என்பதனை ஒரு போதும் மறுக்கவில்லை, அவர்கள் குடியேற வேண்டும் என்பதனையும் மறுக்கவில்லை, அதற்கு நாங்கள் ஆதரவு வழங்குவோம், இருந்தும் இதனைப்பயன்படுத்தி அதிகமான மக்களை கொண்டு வந்து திட்டமிட்டு குடியேற்றுவதனை நாங்கள் அனுமதிக்க மாட்டோம். இதனையே அந்த அமைச்சருக்கு கூறிவைக்க விரும்புகின்றேன்.
எமது தலைவர் சம்பந்தன் அவர்கள் எமது மக்களின் தீர்விக்காக சட்ட நிர்ணய சபையூடாக வடகிழக்கு இணைந்த ஒரு தீர்வினை முன்வைத்து அதற்பால் செயற்பட்டுக் கொண்டு இருக்கின்றார். இந்த அரசியல் தீர்வினை பெறுவதற்காக நாங்கள் அனைவரும் சம்பந்தன் ஐயாவின் கரங்களை பலப்படுத்த வேண்டும்.
இன்று சிலர் 2016 தீர்வு பெற்றுத்தருவதாக சம்பந்தன் ஐயா கூறிய கருத்து பொய்த்து விட்டதாக விமர்சனம் செய்து வருகின்றனர். கால நிர்ணயம் என்பது அனைத்து தலைவர்களாலும் முன்வைக்கப்படுவது ஒரு சாதாரணவிடயமாகும் எமது தேசிய தலைவர் அவர்களும் அடிக்கடி தனது உரையில் காலநிர்ணயத்தை முன்வைப்பதுண்டு எனவே இதை எவரும் விமர்சனம் செய்ய வேண்டிய அவசியமில்லை என இதன் போது அவர் தெரிவித்தார்
DSCF7026DSCF7017DSCF7016

Post a Comment

0 Comments