Ad Code


 

Ticker

6/recent/ticker-posts

மங்கலராமய விகாரதிபதி,பூபாலராஜா ஆகியோர் பிணையில் விடுவிப்பு

பொதுமக்களை பிரதான வீதியில் ஒன்று திரட்டி சமாதானத்துக்கு குந்தகம் ஏற்படுத்தும் முறையில் கலகத்தை உண்டு பண்ணுவதற்க்கு உடந்தையாக இருந்தார்கள் என குற்றச்சாட்டின் கீழ் வழக்கு தாக்கல் செய்யப்பட்டிருந்த மட்டக்களப்பு மங்கலராமய விகாரதிபதி அம்பிட்டியே சுமனரத்தன தேரர் மற்றும் தமிழரசுக்கட்சியின் இளைஞர் அணி உபதலைவர் வி.பூபாலராஜா ஆகியோர் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.
அண்மையில் மட்டக்களப்பு நகரில் ஆர்ப்பாட்டமும் பதட்ட நிலைமையும் மட்டக்களப்பில் நிலவியது. அது பொதுபலசேனாவின் வருகை தடுத்து நிறுத்தப்பட்டதனை தொடர்ந்து மட்டக்களப்பு மங்களாராம விகாரதிபதி அம்பிட்டிய சுமணரத்தின தேரர் நகரில் ஆர்ப்பாட்ட நடவடிக்கை ஒன்றினை முன்னெடுத்திருந்தார்.
நீதிமன்ற உத்தரவினை மீறி தேரரின் ஆர்ப்பாட்ட நடவடிக்கை மேட்கொள்ளப்பட்டமையினை இட்டு பொலிஸார் அதனை தடுத்து நிறுத்தி சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும்இ பொலிஸார் நடவடிக்கை எதுவும் மேற்கொள்ளாதனை கண்டித்து பொதுமக்கள் பாரிய எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் மட்டக்களப்பில் பதட்டமும் அச்ச நிலமையையும் ஏற்பட்டமை ஏற்பட்டிருந்தது.
இந்த நிலையில் பொதுமக்களை பிரதான வீதியில் ஒன்று திரட்டி சமாதானத்துக்கு குந்தகம் ஏற்படுத்தும் முறையில் கலகத்தை உண்டு பண்ணுவதற்க்கு உடந்தையாக இருந்தார்கள் இஇனமுரண்பாட்டை ஏற்படுத்தும் கருத்துகளை பொது இடத்தில் தெரிவித்ததை என பொலிஸார் வழக்கு தொடுத்துள்ளனர்.
இதன் கீழ் இன்று புதன்கிழமை மட்டக்களப்பு நீதிவான் நீதிமன்றில் நடைபெற்றது.
இரு வழக்குகளாக தொடுக்கப்பட்டிருந்த இந்த வழக்கில் மட்டக்களப்பு பொலிஸ் தலைமையக பொறுப்பதிகாரி மற்றும் மட்டக்களப்பு பிரதிப்பொலிஸ் அத்தியட்சர் ஆகியோர் ஆஜராகியிருந்தனர்.
இந்த வழக்கினை விசாரணைசெய்த மட்டக்களப்பு நீதிவான் நீதிமன்ற நீதிபதி எம்.கணேசராஜா மட்டக்களப்பு மங்கலராமய விகாரதிபதி அம்பிட்டியே சுமனரத்தன தேரரை 50ஆயிரம் ரூபா இரு சரீரப்பிணையில் பிணையில் செல்ல அனுமதித்த அதேவேளை தமிழரசுக்கட்சியின் இளைஞர் அணி உபதலைவர் வி.பூபாலராஜாவையும் 50ஆயிரம் ரூபா பெறுமதியான இரண்டு சரீரப்பிணையில் விடுவித்தார்.
இது தொடர்பான இரு வழக்குகளும் ஜனவரி மாதம் 25ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.IMG_0021IMG_0023

Post a Comment

0 Comments