கடற்படை தளபதியின் தாக்குதலுக்கு இலக்கான ஊடகவியலாளர் அது தொடர்பாக பொலிஸாரிடம் முறையிட்டுள்ளார்.
அம்பாந்தோட்டையிலுள்ள உதவி பொலிஸ் அத்தியட்சர் அலுவலகத்தில் அந்த ஊடகவியலாளர் நேற்று அந்த முறைப்பாட்டை மேற்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அம்பாந்தோட்டை துறைமுகத்தில் ஊழியர்களினால் நடத்தப்பட்ட ஆர்ப்பாட்டத்தின் போது செய்தி சேகரித்துக்கொண்டிருந்த போது அங்கு அரைக் காற்சட்டை மற்றும் நீல நிர டீசேர்ட் அணிந்திருந்த ஒருவர் தன் மீது தாக்குதல் நடத்தியுள்ளதாகவும் அவர் கடற்படை தளபதியென்பதனை தான் பின்னரே அறிந்தததாகவும் தான் பணியாற்றும் ஊடக நிறுவனங்களின் உயர் அதிகாரிகளின் கோரிக்கைக்கமைய தனது பாதுகாப்பை கருத்திற்கொண்டே இந்த முறைப்பாட்டை மேற்கொண்டுள்ளதாக அந்த ஊடகவியலாளர் தனது முறைப்பாட்டில் குறிப்பிட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
0 Comments