இலங்கை இந்திய மீனவர் பிரச்சினை தொடர்பிலான கூட்டுச்செயற்பாட்டு குழுவின் அமைச்சர் மட்டத்திலான பேச்சுவார்த்தை எதிர்வரும் ஜனவரி மாதம் 2ம் திகதி கொழும்பில் இடம்பெறவுள்ளது.
நவம்பர் மாதம் 5ம் திகதி இந்த விடயம் தொடர்பில் இலங்கை மற்றும் இந்தியா அமைச்சர்கள் மட்டத்திலான கூட்டத்தின் தொடராகவே இந்த குழுக்கூட்டம் நடைபெற இருப்பதாக இந்திய வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சின் பேச்சாளர் விசாக் சுவர்ணப் தெரிவித்துள்ளார்.
இலங்கை இந்திய அமைச்சர்கள் மட்டத்தில் நவம்பர் மாதம் நடைபெற்ற பேச்சுவார்த்தையின் போது இந்த செயற்பாட்டுக் குழு ஏற்படுத்தப்பட்டது.
மீனவர் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காணும் வகையில் இது அமைக்கப்பட்டது. இதன்போது செயற்பாட்டுக் குழுவின் கூட்டம் ஒவ்வொரு 3 மாதத்திற்கு ஒவ்வொரு முறையும் அமைச்சர்கள் மட்டத்திலான கூட்டம் 6 மாதததிற்கு ஒரு முறையும் நடைபெறுவதாக முடிவுசெய்யப்பட்டது. செயற்பாட்டு குழுவின் கூட்டம் டிசம்பர் மாதம் 31ம் திகதி புதுடில்லியில் நடைபெறவுள்ளது. அமைச்சர்கள் மட்டத்திலான கூட்டம் ஜனவரி மாதம் 2ம் திகதி நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தகக்கது
0 Comments