Ad Code

Responsive Advertisement

Ticker

6/recent/ticker-posts

நாளை அதிசய சந்திரனை காணலாம்

பௌர்ணமி தினங்களில் வழமைப்போல் தெரியும் சந்திரனை விட 30 மடங்கு அதிக வெளிச்சத்தில் தோன்றும் சந்திரனை நாளைய பௌரணமி தினத்தில் மக்களுக்கு காணலாம்
‘சூப்பர் மூன்’ என்று அழைக்கப்படும் இது பூமிக்கு மிக அருகில் நிலவு காட்சியளிப்பதாகும். இதன் போது நிலவு மிகவும் பிரகாசமாகவும், மிகப்பெரியதாகவும் தோற்றமளிக்கும்.
இவ்வாறான நிகழ்வு 68 வருடங்களுக்கு முன்னர் 1948 இல் நிகழ்ந்துள்ளதாக இலங்கை கோள் மண்டலம் தெரிவித்துள்ளது
பூமியில் இருந்து 3 லட்சத்து 84 ஆயிரத்து 400 கிலோமீட்டர் தொலைவில் சந்திரன் சுற்றி வருகிறது, சந்திரன் பூமியை சுற்றிவரும் போது குறிப்பிட்ட நீள்வட்டப்பாதையில் செல்லாமல் அதில் இருந்து விலகி சில நேரங்களில் பூமிக்கு அதன் தொலைவில் இருந்து 48,000 கிலோமீட்டர் அருகில் செல்லும். போதே இது போன்று பெரிய சந்திரன் தெரியுமென தெரிவிக்கப்பட்டுள்ளது.

Post a Comment

0 Comments