பாடசாலை மாணவர்களின் சீருடைக்காக வழங்கப்படும் பண வவுச்சர்களை பாடசாலைகளுக்கு விநியோகிக்கும் பணிகள் இன்று முதலாம் திகதி முதல் ஆரம்பமாகவுள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.
வலய கல்விப் பணிப்பாளர்களின் மூலம் சம்பந்தப்பட்ட பாடசாலை அதிபர்களுக்கு மாணவர்களின் சீருடைக்கான பண வவுச்சர்கள் அனுப்பி வைக்கப்படவிருப்பதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.
கடந்த வருடத்தில் இடம்பெற்ற குறைபாடுகளை களைத்து இம்முறை முறையான வேலைத்திட்டம் முன்னெடுக்கப்பட்டிருப்பதாகவும் அமைச்சு தெரிவித்துள்ளது
0 Comments