இலங்கை கிரிக்கெட் வீரரான குசல் ஜனித் பெரேரா செய்யாத தவறுக்கு தண்டனை வழங்கிய மருத்துவமனைக்கு விரைவில் மூடுவிழா மேற்கொள்ளப்படும் என்ற தகவல் வெளியாகியுள்ளது.
இலங்கை கிரிக்கெட் வீரரான குசல் ஜனித் பெரேராவுக்கு கடந்த ஆண்டு ஊக்க மருந்து சோதனை மேற்கொள்ளப்பட்டது. இதற்காக நடந்த முதல் ஊக்க மருந்து சோதனையில் அவர் ஊக்க மருந்து பயன்படுத்தியதாக கட்டார் பரிசோதனை ஆய்வுக் கூடம் தெரிவித்திருந்தது.
அதைத் தொடர்ந்து அவருக்கு மேற்கொள்ளப்பட்ட மேற்படி சோதனையில் அவர் ஊக்கமருந்து பயன்படுத்தவில்லை என்ற தகவல் உறுதியானது.
இதன் அடிப்படையில் செய்யாத தவறுக்கு தண்டனை வழங்கிய கட்டார் அரச பரிசோதனை ஆய்வுகூடத்திற்கு, சர்வதேச ஊக்கமருந்து ஒழுக்காற்று நிறுவனம் தடை விதித்துள்ளது என கூறப்படுகிறது.
இது குறித்து சர்வதேச ஊக்கமருந்து ஒழுக்காற்று நிறுவனம் கூறுகையில், பெரேராவுக்கு முதல் கட்ட சோதனை மேற்கொண்ட குறித்த நிறுவனமானது சர்வதேச ரீதியில் நடத்தப்படும் பரிசோதனைகளின் நம்பிக்கைக்கு பங்கம் விளைவித்துள்ளதாகவும், இதன் மூலம் வீரர் வீராங்கனைகள் மீது நம்பிக்கை இல்லாமல் போய்விடுகிறது என கூறியுள்ளது.
இதன் காரணமாகவே கட்டார் பரிசோதனை ஆய்வு கூடத்திற்கு தடை விதித்துள்ளதாக கூறியுள்ளது.
0 Comments