தேசிய கல்வியியற் கல்லூரிகளுக்கு புதிய மாணவர்களை இணைத்துக் கொள்வதற்கான நேர்முகப் பரீட்சை இம்மாத இறுதியில் நடைபெறவுள்ளது.
மாணவர்கள் ஜனவரி மாதம் கல்லுரிகளில் இணைத்துக்கொள்ளப்படவுள்னர் என்று கல்வி அமைச்சின், ஆசிரியர் கல்விக்குப் பொறுப்பான ஆணையாளர் கே.எம்.எச்.பண்டார தெரிவித்துள்ளார்.
50 சதவீதமான மாணவர்கள் திறமை அடிப்படையிலும், ஏனைய 50 சதவீதமானோர் பிரதேச செயலாளர் மட்டரீதியிலும் தெரிவு செய்யப்படவிருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
30 ஆயிரம் பேர் விண்ணப்பித்துள்ளனர். இவர்களிருந்து நான்காயிரத்து 65 பேர் கல்வியல் கல்லூரிகளுக்கு இணைத்துக் கொள்ளப்படவிருப்பதாகவும் ஆணையாளர் தெரிவிதார். கூடுதலானோர் ஆரம்ப கல்விப் பயிற்சிக்காக சேர்த்துக் கொள்ளப்படவிருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
0 Comments