Ad Code

Responsive Advertisement

Ticker

6/recent/ticker-posts

மட்டக்களப்பில் நடனவிழாவும் திரை இசை வெளியீடும்

கிழக்கு மாகாணத்தில் முதன்முறையாக ஆரம்பிக்கப்பட்டு நடனக்கலையினை வளர்க்கும் பணிகளில் ஈடுபட்டுவரும் மட்டக்களப்பு செங்கலடி வேவ் டான்ஸ் ஸ்ரூடியோவின் 2016ஆம் ஆண்டுக்கான நடன விழாவும் “திசை” திரைப்படத்தின் இசை வெளியீடும் சிறப்பாக நடைபெற்றது.

செங்கலடி செல்லம் சினிமா மண்டபத்தில் வேவ் டான்ஸ் ஸ்ரூடியோவின் தலைவர் சங்கரலிங்கம் கிருஸ்ணகாந்தன் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் மட்டக்கள்ப்பு மாவட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.வியாழேந்திரன் பிரதம அதிதியாக கலந்துகொண்டார்.

இளைஞர்களுக்குள் இருக்கும் திறமைகளை வெளிக்கொணரும் வகையில் வேவ் டான்ஸ் ஸ்ரூடியோ கலைப்பணியை சிறப்பான முறையில் ஆற்றிவருகின்றது.

மேற்கத்தையே மற்றும் உள்நாட்டு கலைகளை சிறப்பான முறையில் பயிற்சிகளை வழங்கிவரும் இந்த வேவ் டான்ஸ் ஸ்ரூடியோவின் நிகழ்வுகள் வருடாந்த சிறப்பான முறையில் நடாத்தப்பட்டுவருகின்றது.

வேவ் டான்ஸ் ஸ்ரூடியோவின் ஸ்ரூடியோவின் தலைவர் சங்கரலிங்கம் கிருஸ்ணகாந்தனின் தயாரிப்பு,கதை,இயக்கத்தில் உருவாகியுள்ள “திசை” முழு நீள திரைப்படத்தின் இசை வெளியீடும் இதன்போது நடைபெற்றது.

வடகிழக்கு மாகாணத்தில் உள்ள கலைஞர்களின் ஒத்துழைப்புடன் இந்த திறைப்படம் சிறப்பான முறையில் தயாரிக்கப்பட்டுவருகின்றது.

















Post a Comment

0 Comments