யாழ்ப்பாணம் சுன்னாகம் பகுதியில் இரண்டு பொலிஸார் மீது வாள்வெட்டுச் சம்பவம் இடம்பெற்றிருக்கின்றது. இன்று மாலை இடம்பெற்ற இச்சம்பவத்தையடுத்து யாழ்ப்பாணத்தில் பதற்றமும் பரபரப்பும் ஏற்பட்டுள்ளது.
சுன்னாகம் பூட் சிட்டி அருகிலேயே இச்சம்பவம் இடம்பெற்றிருக்கின்றது. இங்கு நின்ற இரு பொலிஸாரை நோக்கி திடீரென வந்த ஐந்து இளைஞர்கள் அவர்கள் மீது வாளால் வெட்டிவிடுத் தப்பிச் சென்றுவிட்டதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
காயமடைந்த பொலிஸார் சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்டுள்ளனர். இச்சம்பவத்தையடுத்து அங்கு பெரும் பதற்ற நிலை காணப்படுகின்றது


0 Comments