யாழில் இருந்து கொழும்புக்கு கடத்தப்பட்ட ஒன்றரைக் கோடி ரூபாய் பெறுமதியான கேரளா கஞ்சாவை இன்று அதிகாலை வாகனத்துடன் கைப்பற்றியதாக வவுனியா பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி சோமரட்ண விஜயமுனி தெரிவித்தள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
யாழ்ப்பாணம், சாவகச்சேரி பகுதியில் இருந்து கொழும்பு நோக்கிச் சென்ற ஹயஸ் ரக வாகனம் ஒன்றை வவுனியா, ஏ9 வீதி, பிறவுண் பொலிஸ் காவலரண் பகுதியில் கடமையில் நின்ற பொலிசார் மறித்து சோதனை செய்த போது அதில் வாழைக்குலைகள், தேங்காய்கள் என்பவற்றுடன் மறைத்து வைக்கப்பட்டிருந்த ஒரு கோடி ஐம்பது லட்சம் பெறுமதியான 102 கிலோ கிராம் கேரளா கஞ்சா மீட்கப்பட்டுள்ளது. இதனையடுத்து குறித்த வான் கைப்பற்றப்பட்டுள்ளதுடன் அதன் சாரதியும் கைது செய்யப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்டவர் யாழ் சாவகச்சேரி பகுதியைச் சேர்ந்தவராவார். இவரை நீதிமன்றில் முற்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதுடன் மேலதிக விசாரணைகளை வவுனியா பொலிசார் ஆரம்பித்துள்ளனர் எனவும் தெரிவித்தார்.
0 Comments