ஊடகவியலாளர் லசந்த விக்கிரமதுங்கவை தானே கொலை செய்ததாக தெரிவித்து அண்மையில் கேகாலையில் தற்கொலை செய்துக்கொண்ட புலனாய்வு பிரிவு உறுப்பினர் 2009இல் லசந்த விக்கிரமதுங்க கொல்லப்பட்ட தினத்தில் எங்கேயும் செல்லாது வீட்டிலேயே இருந்துள்ளதாக அவரின் தொலைபேசி அழைப்பு தகவல்கள் மூலம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் அவர் தானே கொலை செய்ததாக தெரிவித்து கடிதமொன்றை எழுதி வைத்து தற்கொலை செய்துள்ளதாக தெரிவிக்கப்படும் சம்பவம் தொடர்பாக பெரும் சந்தேகங்கள் எழுந்துள்ளதுடன் குறித்த கடிதம் அவராலேயே எழுதப்பட்டதா ? , அவர் தற்கொலை செய்தாரா? அல்லது வேறு யாரும் அவரை கொலை செய்து தூக்கில் மாட்டினார்களா? இல்லையேல் யாருடையதேனும் அழுத்தம் காரணமாக அவர் அவ்வாறு செய்தாரா? என்ற கோணங்களில் சீ.ஐ.டியினர் விசாரணைகளை நடத்தி வருகின்றனர்


0 Comments