தம்மால் முன்வைக்கப்பட்டுள்ள யோசனைகளும் உள்ளடக்கப்பட்டால் மட்டுமே 2017 வரவு செலவு திட்டத்திற்கு ஶ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் ஆதரவு கிடைக்குமென அந்தக் கட்சியின் போச்சாளர் டிலான் பெரேரா தெரிவித்துள்ளார்.
வரவு செலவு திட்டத்தில் உள்ளடக்குமாறு தமது கட்சியும் யோசனைகளை முன்வைத்துள்ளதாகவும் அது தொடர்பாக கவனம் செலுத்தப்படுமென எண்ணுவதாகவும் இல்லையென்றால் வரவு செலவு திட்டத்திற்கு ஆதரவாக தாம் வாக்களிக்க மாட்டோம் என அவர் தெரிவித்துள்ளார்.
நேற்று ஹாலிஹெல பகுதியில் நடைபெற்ற நிகழ்வொன்றில் உரையாற்றும் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.


0 Comments