Ad Code


 

Ticker

6/recent/ticker-posts

யாழ் பல்கலைக்கழக மாணவர்கள் சுட்டுக் கொல்லப்பட்டதைக் கண்டித்து இலங்கை தூதரகம் முற்றுகை!

இலங்கையில் யாழ் பல்கலைக்கழக மாணவர்கள் சுட்டுக் கொல்லப்பட்டதைக் கண்டித்து இலங்கை தூதரகம் முன் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கைது செய்யப்பட்டனர்.
இலங்கையில் கடந்த 20ம் தேதி யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த தமிழ் மாணவர்கள் விஜயகுமார் சுலக்சன் மற்றும் நடராஜா ஆகியோர் இலங்கை போலீசாரால் சுட்டுக் கொல்லப்பட்டனர். இதனை கண்டித்து இலங்கையில் பல்வேறு இடங்களில் தமிழ் அமைப்புகள் சார்பாக போராட்டம் நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் தமிழ் மாணவர்கள் கொல்லப்பட்டதற்கு கண்டனம் தெரிவித்தும், இலங்கை அரசை கண்டித்தும் இன்று சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள இலங்கை தூதரகம் முன்பாக முற்றுகை போராட்டம் நடைபெற்றது.

Post a Comment

0 Comments