காட்டு யானை அச்சுறுத்தல் காணப்படும் கிராமங்களைச் சுற்றி 800 கி.மீற்றருக்கு மின்வேலிகளை அமைக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.
“காட்டு யானை – மனிதன் மோதல் முகாமைத்துவ தேசிய திட்டத்தின்” கீழ் 2017ம் ஆண்டுக்குள் காட்டு யானை அச்சுறுத்தல் காணப்படும் 07 வனஜீவராசிகள் வலயத்தில் காணப்படும் கிராமங்களைச் சுற்றி 800 கி.மீற்றருக்கான மின்வேலியினை அமைப்பதற்கும், அதற்கு தேவையான உபகரணங்களை கொள்வனவு செய்வதற்கும் வலுவாதார அபிவிருத்தி மற்றும் வனசீவராசிகள் அமைச்சர் காமினி ஜயவிக்ரம பெரேரா அவர்களினால் முன்வைக்கப்பட்ட யோசனைகளுக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது


0 Comments