Advertisement

Responsive Advertisement

மாகாணத்திற்கு வெளியே நியமனம் பெற்ற டிப்பிளோமா ஆசிரியர்கள் முறைப்பாடு செய்தால் தீர்வு பெற நடவடிக்கை: இராஜாங்க அமைச்சர்

மாகாணத்திற்கு வெளியே நியமனம் பெற்ற டிப்பிளோமாதாரி ஆசிரியர்களுக்கு தீர்வு வழங்க குழு ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்டவர்கள் முறைப்பாடு செய்தால் தீர்வு பெற்றுத்தரப் தரப்படும். அத்துடன் நாட்டில் 21 ஆயிரம் ஆசிரியர் வெற்றிடம் காணப்படுகின்றது. அதனாலேயே சிக்கல் ஏற்பட்டுள்ளது என கல்வி இராஜாங்க அமைச்சர் பொ.இராதாகிருஸ்ணன் தெரிவித்துள்ளார்.
வவுனியாவில் இன்று இடம்பெற்ற தேசிய வாசிப்பு மாத நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே இதனைத் தெரிவித்தார். அவர் தொடர்ந்தும் தெரிவிக்கையில்,
தற்போது தேசிய ரீதியான பல்வேறு நிகழ்வுகள் வடமாகாணத்தில் நடைபெறுவதற்கான வாய்ப்புக்கள் ஏற்பட்டுள்ளது. நாட்டின் தேசிய விளையாட்டு விழா யாழ்ப்பாணத்தில் நடைபெற்றது. அதேபோல் தேசிய வாசிப்பு மாத நிகழ்வு வவுனியாவில் நடைபெறுகிறது. அதேபோல் அருகில் உள்ள பாடசாலை நல்ல திட்டம் கொழும்பில் ஆரம்பிக்கப்பட்ட போது சமகாலத்தில் கிளிநொச்சியிலும் ஆரம்பிக்கப்பட்டது. ஆகவே இந்த தேசிய நிகழ்வுகள் வடக்கிற்கு வருவது சிறப்பான விடயமாகும். அதற்கு இந்த வடக்கில் இருக்கின்ற வடமாகாண சபையின் உட்வேகம், தேசிய அரசில் அமைச்சர்களாக இருக்கின்ற நாங்கள் செய்கின்ற வேலைகள் என்பவற்றுடன் 30 வருட யுத்தத்திற்கு பின்பு இங்கு செய்ய வேண்டும் என்ற ஆவல் எல்லோருக்கும் வந்துள்ளது.
இது இந்த நல்லாட்சியின் விளைவு என்பதைக் கூறிக் கொள்ள விரும்புகின்றேன். இன்றைய நிகழ்வு வாசிப்பு மாத நிகழ்வு. வாசிப்பு என்பது ஒரு மனிதனை பூரணமாக்கிறது. நாளாந்த பத்திரிகைள், புத்தகங்கள் எனப் பலவற்றை நாம் வாசிக்க பழகிக் கொள்ள வேண்டும். மாணவர்களுக்கும் அவற்றைப் படிக்க ஊக்கிவிக்க வேண்டும்.
தென்னாசியாவிலேயே சிறப்பு பெற்றது யாழ் நூலகம். தமிழராட்சி மாநாடு நடைபெற்ற போது அந்த நூலகம் எரிக்கப்பட்டிருந்தது. அந்த நூல் நிலையத்தில் இருந்த புத்தகங்களின் பெருமையை இன்றும் பலர் பேசுவதை கேட்கக் கூடியதாக இருக்கின்றது. அன்று அங்கு இருந்த புத்தகம் இன்று இல்லை என்று சொல்கிறார்கள். ஆகவே புத்தகம் என்பது ஒரு பொக்கிசம். அந்த பொக்கிசத்தை நாம் காப்பாற்ற வேண்டும். நாம் வாசிக்க வேண்டும். மீட்டிப் பார்க்க வேண்டும். அதைவாசித்து பார்த்தால் தான் அதன் சுவாரசியம் தெரியும். இந்த புத்தகங்களை பாதுகாக்க இன்று தேசிய நூலகம் இருக்கின்றது.
இது தவிர, டிப்பிளோதாரி ஆசிரியர்கள் சிலர் பாதிக்கப்பட்டுள்ளதாக கூறியுள்ளார்கள்.
அண்மையில் கல்வியற்கல்லூரி டிப்பிளோதாரி ஆசிரியர்களுக்கு நியமனம் வழங்கப்பட்டது. இலங்கையில் தற்போது 18 தேசிய கல்வியற்கல்லூரிகள் இருக்கின்றது. இந்த கல்லூரிகளில் இருந்து வெளியேறுகின்ற டிப்பிளோமாதாரி ஆசிரியர்கள் பொதுவாக பாடசாலை வெற்றிடங்களுக்கும், பென்சன் போகின்ற பாடசாலை ஆசிரியர்களை கணக்கில் இட்டும் அவ்வாறான பாடசாலைகளுக்கு அந்த ஆசிரியர்களை நியமிக்கின்றோம். அதேநேரத்தில் இன்று இலங்கை நாட்டிலே 21 ஆயிரம் ஆசிரியர் வெற்றிடங்கள் இருக்கின்றன. இவர்களில் அண்மையில் மூவாயிரத்து 625 பேர் நியமனம் பெற்றுள்ளனர். ஆகவே ஆசிரிய பற்றாக்குறை உள்ளமையால் ஏதோவொரு முறையின்மை காரணமாக டிப்பிளோதாரி ஆசிரியர்கள் தமது மாகாணங்களை விட்டு வேறு மாகாணங்களுக்கும் நியமிக்கப்பட்டுள்ளார்கள். நுவரெலியாவில் இருந்து ஒருவர் மன்னாருக்கும், யாழ்ப்பாணத்தில் இருந்து ஒருவர் கண்டிக்கும் போடப்பட்டுள்ளனர். இவ்வாறு மாறி மாறி நியமனங்கள் வழங்கப்பட்டுள்ளது. இதை கல்வி அமைச்சர், கல்வி அமைச்சின் செயலாளர் ஆகியோருடன் பேசி இது தொடர்பில் முறைபாடுகளைப் பெறவும், விசாரணை செய்யவும் குழு ஒன்றை அமைத்துள்ளோம். அதில் அவர்கள் முறைப்பாடு செய்யலாம். ஒருவர் தமது மாகாணத்தில் எந்த மாவட்டத்தில் என்றாலும் பணியாற்ற வேண்டும்.
ஆனால் மாகாணத்திற்கு வெளியே நியமிக்கப்பட்டதால் அசௌகரியம் ஏற்பட்டால் முறைப்பாடு செய்தால் நாம் அவர்களுகுரிய தீர்வைப் பெற்றுக் கொடுப்போம் எனத் தெரிவித்தார்.

Post a Comment

0 Comments