Advertisement

Responsive Advertisement

அநுராதபுரம் சிறையில் தமிழ் அரசியல் கைதிகள் இரண்டாவது நாளாக இன்று உண்ணாவிரதம்

பயங்கரவாதத் தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு நீண்டகாலமாக தாம் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாகவும், தமது வழக்கு விசாரணைகளை துரிதப்படுத்துமாறும் வலியுறுத்தி அநுராதபுரம் சிறையில் உள்ள தமிழ்க் கைதிகள் உண்ணாவிரதத்தை ஆரம்பித்துள்ளதாக சிறைச்சாலைகள் ஊடகப் பேச்சாளர், துஷார உப்புல்தெனிய குறிப்பிட்டார்.
தம் மீதான சட்ட நடவடிக்கைகளைத் துரிதப்படுத்துமாறும் தமிழ் அரசியல் கைதிகள் வலியுறுத்தியுள்ளனர். நேற்று ஆரம்பித்த இந்த உண்ணாவிரதப் போராட்டம் இன்று இரண்டாவது நாளாகத் தொடர்கின்றது.
புனர்வாழ்வு பெற்றுக்கொள்ளுதல் அல்லது தமக்கு எதிரான அனுராதபுரம் விசேட நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டிருக்கும் வழக்குகளை வட மாகாண நீதிமன்ற எல்லைக்குள் மாற்றிக்கொள்தல் என்பவற்றிற்காக கடந்த மாதம் தமிழ் அரசியல் கைதிகள் ஜனாதிபதிக்கு மஹஜர் அனுப்பி வைத்திருந்தனர்.

Post a Comment

0 Comments