Home » » பாசிக்குடா சம்பவம் முழு இலங்கையையும் திகைக்க வைத்துள்ளது.- அரசாங்க அதிபர் திருமதி பி.எஸ்.எம்.சார்ள்ஸ்

பாசிக்குடா சம்பவம் முழு இலங்கையையும் திகைக்க வைத்துள்ளது.- அரசாங்க அதிபர் திருமதி பி.எஸ்.எம்.சார்ள்ஸ்

பாசிக்குடாவில் இரு ஆண்பிள்ளைகள் இறந்து, அவர்களது தாய் தந்தையர் இறந்த சம்பவம் மட்டக்களப்பை மாத்திரமல்ல முழு இலங்கையையும் திகைக்க வைத்தது. எனவே கரையோரப் பிரதேசங்களை பயன்படுத்துவது எப்படி, பாகாதுப்பது எப்படி, வருமானத்தினைத் தேடிக்கொள்வது எப்படி என்பவற்றினை உணர்ந்து கொண்டு செயற்பட வேண்டும் என மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி பி.எஸ்.எம்.சார்ள்ஸ் தெரிவித்தார்.

இன்று புதன்கிழமை காலை 7 மணிக்கு மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி பி.எஸ்.எம்.சார்ள்ஸ் தலைமையில் இடம்பெற்ற தேசிய கரையோரம் தூயப்படுத்தல் தினத்தின் மட்டக்களப்பு மாவட்டத்துக்கான நிகழ்விலேயே இவர் இவ்வாறு தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

இங்கு தொடர்ந்து உரையாற்றிய அரசாங்க அதிபர்,

சர்வதேச ரீதியாக அதிகமான கரையோங்களைக் கொண்ட நாடுகள் வரிசையில் இலங்கை 5 ஆவது இடத்தில் காண்படுகின்றது. இதுவே ஜனாதிபதி கரையோரம் தொடர்பில் அதிக கவனத்துடன் செயற்படுவதற்கு முக்கியமான காரணம்.

இலங்கையிலே முதன் முதலில் சூரியனைக்காண்கின்றவர்களாக நாங்கள் இருக்கிறோம். கடற்கரையோரங்கள் மிகவும் முக்கியமானவை. இந்தக் கடற்கரையோரங்களை மீன்பிடித் தேவைகளுக்காக மாத்திரமே நாம் பயன்படுத்திவருகிறோம்.

உலகின் வளர்ச்சியடைந்த நாடுகளாக உள்ளைவைகள் அனைத்துமே கடற்கரையை மையமாகக் கொண்டவையாகவே காணப்படுகின்றன. அந்த வகையில் முழுயாகக் கடற்கரையைப் பயன்படுத்த வேண்டும். கடற்கரையைப் பயன்படுத்துபவர்கள் இவ்வாறான நிகழ்வுகளில் பங்கு பெறுவது, பங்குபெறச் செய்வதும் மிக முக்கியமானது.

எனினும் அவர்கள் இந்தக் கடற்கரையைப் பயன்படுத்துவது எப்படி, பாதுகாப்பது எப்படி, வருமானத்தினைத் தேடிக்கொள்வது எப்படி என்பவற்றினை உணர்ந்து கொண்டு செயற்பட வேண்டும்.

இருப்பினும் பாடசாலை மாணவர்களுக்கு முக்கியமான விடயம், அண்மைக்காலமாக கடலில் குளிக்க முடியாத இடங்களிலெல்லாம் சிறுவர்கள், இளைஞர்கள் குளித்து வருகின்றார்கள்.

இந்த வாரத்தில் நடந்த இரண்டு ஆண்பிள்ளைகள் இறந்தவுடன் தாயும் தந்தையும் இறந்த சம்பவம், இது மட்டக்களப்பினை மட்டுமல்ல முழு இலங்கையையுமே திகைக்க வைத்த சம்பவம். இது போன்ற பல்வேறு சம்பவங்கள் நடந்து கொண்டிருக்கின்றன. மக்கள் மன அழுத்தத்தில் இருக்கிறார்களா என்பது கேள்விக்குறியாக இருக்கின்றன.

எனவே உள்ளுர் மக்களும் இந்தக் கடற்கரையினைச் சிறப்பாகப் பயன்படுத்த வேண்டும். அவர்களும் இதனுடைய ஆபத்துக்களை உணர்ந்தவர்களாக, எச்சரிக்கையுடையவர்களாக வளர்க்கப்பட வேண்டும் என்ற செய்தி சென்றடைய வேண்டும்.

இந்த அழகான பிரதேசத்தின் வளத்தினை உச்ச அழவில் பயன்படுத்தி மக்களுடைய வாழ்வாதாரத்தினைக் கட்டியெழுப்புவதோடு அவர்களுடைய தேவைகளையும் அவர்களுடைய எதிர்காலத்தையும் சரியாகப்பாதுக்கின்ற வகையிலும் இப்பிரதேசத்தினைப் பாதுகாக்க வேண்டும். அதற்காக இந்த வாரத்தில் மாத்திரம் செயற்படாமல், தொடர்ச்சியாக செயற்பட வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார்.

இந்த நிகழ்விற்கு கரையோரம் பேணல் திணைக்களத்தின் மட்டக்களப்பு மாவட்ட திட்ட இணைப்பாளர் ஏ.கோகுலதீபன், ஏறாவூர் பற்று உதவிப்பிரதேச செயலாளர், கடல்சார் பாதுகாப்பு அதிகார சபையின் மாவட்ட அதிகாரி, ஏறாவூர் பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி மற்றும் உத்தியோகத்தர்கள், பொதுமக்கள், பாடசாலை மாணவர்கள், ஆசிரியர்களும் கலந்து கொண்டனர்.


Share this article :

0 comments:

 

" KURUKKALMADAM NEWS, BATTICALOA, SRI LANKA... Designed by P.LOSHITHARAN ".

Copyright © 2011. KURUNEWS.COM, KURUKKALMADAM, BATTICALOA, SRI LANKA - All Rights Reserved
Designed by P.LOSHITHARAN |