Ad Code

Responsive Advertisement

Ticker

6/recent/ticker-posts

விஷப் பாம்புகளிடமிருந்து தப்பித்துக்கொள்ள அற்புதமான சில வழிகள்…

இலங்கையில் 104 வகைபாம்புகள் வாழ்கின்றன. இவற்றில் அனேகமானவை தீங்கு விளைவிக்கக் கூடியவையல்ல. எல்லாப் பாம்புகளும் தீண்டுவதில்லை. தீண்டும் பாம்புகள் எல்லாம் நச்சுப் பாம்புகளில்லை. எல்லாவிசப் பாம்புகள் தீண்டுதல்களும் மரணத்தில் முடிவதில்லை. இலங்கையில் பாம்புதீண்டுதலினால் ஏற்படும் அனேகமரணங்கள் 4 வகையான பாம்புகளினாலேயே ஏற்படுகின்றன.
அவையாவன:
  1. கண்ணாடிவிரியன்
  2.  நாகபாம்பு
  3. எண்ணைவிரியன்
  4.  கூனல் மூக்குபுடையன்
ஐந்தாவது இனமாகிய சுருட்டை பாம்பு அதிக விஷம் உடையதாக உள்ள போதும் இதனால் இலங்கையில் மரணமடைந்தோர் பற்றி எவ்வித அறிக்கையும் இல்லை. அடுத்ததாக கூனல் மூக்குவிரியன் அதிகவிஷ முடையதெனதற் போது கண்டுபிடிக்கப்பட்டுள்ள போதிலும் அதனால் பாதிக்கப்பட்டோர்மிகவும் அரிதாகவே காணப்படுகிறது.
கரையோரநீர்பகுதிகளில் பதினைந்து (15)இன கடற் பாம்புகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இவையாவும் அதிகவிஷம் கூடியதாயினும் அவைதீண்டுவதுமிகவும் அரிது.

பொதுவாக பாம்புக்கடியிலிருந்து தப்பித்துக் கொள்ள பின்வரும் வழிமுறைகளைகையாள முடியும்

  • கால்களிலேயே பாம்புகள் தீண்டுவதால்,பாம்புகள் வசிக்கும் இடங்களில் நடக்கும் போது சப்பாத்து அல்லது கணுக்கால் வரை மூடும் பாதரட்சைகள் அத்துடன் கணுக்கால் வரை நீளமுள்ள ஆடைகள் அணிந்து பாதுகாத்துக் கொள்ளவும்.
  • இரவில் பாம்புகள் மீதுமிதிப்பதைதவிர்க்கவெளிச்சம் ஒன்றைஎடுத்துச் செல்லவும்.
  • பாம்புகள் செறிந்து வாழும் பகுதிகளில் நடக்கும் போதுகையில் ஒருதடியை ஏந்தி அதனால் வழியில் தென்படும் இருமருங்கிலும் புல் பற்றைகளை அடித்துக்  கொண்டு செல்வதனால் பாம்புகள் நீங்கள் செல்லும் பாதையில் முன் நோக்கி நகர்ந்து விடும்.
  • நிலத்தில் அழுத்திகனமாக நடந்து நீங்கள் கிட்ட நெருங்குவதையும் பாம்புக்கு எச்சரிக்கவும். ஏனெனில் பாம்புக்குகாற்றில் மிதக்கும் சத்தங்கள் அதிகமாகக் கேட்கமாட்டாது. ஆனால் நிலஅதிர்சியை அவை இலகுவில் உணர்கின்றன.
  • எறும்புப் புற்றுகள்,அடர்ந்த புதர்கள்  மரக்குற்றிகளின் கீழ் பக்கங்கள் மரப் பொந்துகள் போன்றவற்றினுள் கவலையினமாககையைவைக்காதீர்கள். எறும்புப் புற்றுகளைஅழிக்கவும். மரப் பொந்துகளைநிரப்பவும். வேலைசெய்யும் போதும் கற்பாறைகள் மரக்குற்றிகள் போன்றவற்றை அகற்றும் போதும் கவனம் செலுத்தவும். ஏனெனில் இவற்றின் கீழ் பாம்புகள் குடியிருக்கும்.
  • நெல் அறுவடைசெய்யும் போதுமிகவும் அவதானமாக இருக்கவேண்டும்.
  • பாம்புகள் உணவிற்காகதேடிச் செல்லும் எலி,தவளை, பல்லி போன்றவை வரவிடாது வீட்டையும் சுற்றாடலையும் குப்பை கூளங்களைகிரமமாக அகற்றி சுத்தமாக வைத்திருங்கள்.

பாம்பு கடித்த ஒருவரிற்கான முதலுதவி முறைகளை அனைவரும் அறிந்துவைத்திருப்பது நல்லது.
தவறான முதலுதவி ஆபத்தை ஏற்படுத்தக் கூடும்.

  1. பாம்பு தீண்டுதலை தொடர்ந்து, தீண்டப்பட்டவருக்கு பொதுவாக ஏற்படும் பிரதிபலிப்பு பயமாகும். அவருக்கு மரணம் ஏற்பட்டுவிடுமோ என்ற பயம் ஏற்படலாம். அவருக்கு நம்பிக்கையூட்டக்கூடிய முறையில் விடயங்களை தெளிவுபடுத்த வேண்டும். இதற்காக பின்வரும் முக்கியதரவுகளைஅழுத்திக் கூற வேண்டும்.
    • அனேகமான பாம்புகள் விஷம் உள்ளவைகள் அல்ல.
    •  தீண்டிய பாம்பு விஷமுள்ளதாக இருந்தாலும் அதுவிஷத்தை உட்செலுத்தாமலிருக்க முடியும். பல அடையாளங்கள் இருந்தாலும் விஷம் உடலினுள் புகுந்து விட்டது என கருதலாகாது.
    •  விஷம் உட்புகுந்தாலும் வைத்தியசாலைகளில் நற்பலனளிக்கக் கூடிய சிகிச்சை முறை உண்டு. இச் சிகிச்சைகள் பூரண குணத்தை தரவல்லது.
2.பாம்பினால் தீண்டப்பட்டவரை பிரதானமாக தீண்டப்பட்ட அவயத்தை அசைவற்ற நிலையில்
வைத்துக் கொள்ள வேண்டும். ஏனெனில்,
(அ) தீண்டப்பட்ட உறுப்பு அசைந்தால்  பாம்பினால்  உட்புகுத்தப்பட்ட விஷம்  உடலினுள் மிக விரைவாக அகத்துறிஞ்சப்படும்.  எனவே, தீண்டப்பட்டவரை அசையாதுவைத்தாக வேண்டும்.  அவரை நடத்தி செல்வதிலும் பார்க்க தூக்கி செல்வதே சிறந்தது.
(ஆ) அத்துடன் தீண்டப்பட்ட உறுப்பை ஒரு துண்டு பலகை போன்ற கடினமாக பொருளின் மேல் வைத்துக் கட்டி அவ்வுறுப்பை அசைவற்றதாக செய்வதால் உட்புகுந்த விஷம் அகத்துறிஞ்சப்படுவதை தாமதப்படுத்தலாம். இதுநோவைகுறைப்பதற்கும் உதவும்.
3. பாம்புகடித்த இடத்தில் தோலின் மேலிருக்கும் விஷத்தைஅகற்றஅவ்விடத்தை சவர்க்காரமும் நீரும் பாவித்து மெதுவாக கழுவவேண்டும்  அல்லது ஈரச்சேலையால் துடைக்க வேண்டும்.  உரமாகவோ அழுத்தியோ தேய்த்தால் விஷம் விரைவாகஉறிஞ்சப்பட வாய்ப்புண்டு.
4. விஷப்பாம்பு தீண்டலுக்கு பின்  தீண்டப்பட்ட உறுப்பு வீங்குவது ஒருசாதாரண அம்சமாகும். அப்படிவீக்கம் ஏற்படின் அதனால் ஏற்படக் கூடிய பிரச்சினைகளை தடுக்க விரைவாக அணிந்திருக்கும் மோதிரம், வளையல்கள், பாதசரம், கயிறு, உடுப்பு போன்றவற்றை அகற்ற வேண்டும்.
5. வலியைகுறைக்க“பரசிற்றமோல்”பாவிக்கலாம்.
6. பாம்பு தீண்டலுக்கு உள்ளான வரை முடியுமான விரைவில் வைத்தியசாலைக்கு கொண்டு செல்ல வேண்டும். கடித்த பாம்பை பற்றி சரியான விபரங்களை சொல்வதன் மூலம் கடித்த பாம்பை அடையாளம் காணவும், சிகிச்சை அளிக்கவும் உதவும்.

தவிர்க்கப்படவேண்டியசிலவிடயங்கள்

  1. தீண்டப்பட்ட காயத்தை  கூரியகத்தியால்  வெட்டுவதும்  அல்லது உறிஞ்சும் முறையைகையாள்வதும் தவிர்க்கப்படவேண்டும்.  பாம்புகள்  அனேகமாக நஞ்சைமிகவும் ஆழமாக புகுத்துவதால் உறிஞ்சுவது எந்த வகை பயனையும் தரமாட்டாது.  அனுபவமற்ற முறையில் கத்தியால் வெட்டுவதால் தசைநார், இரத்த குழாய்கள், நரம்புகளுக்கு சேதத்தை ஏற்படுத்த நேரிடலாம்  இந்த காயங்களிலிருந்து  இரத்த பெருக்கு ஏற்படின் அது இன்னும் பாரிய விளைவுகளை ஏற்படுத்தும்.
  2.  முதற்சிகிச்சை அழிப்பதற்கென பாம்பு தீண்டுதலுக்கு உள்ளான பகுதியை கயிறு போன்றவற்றால் இறுக்கிகட்டுப் போடுவதை தவிர்க்கவும்.
  3.  கொண்டிஸ் படிவங்களைபோன்ற இரசாயன பொருட்களை காயத்தின் மேல் இடுவதை தவிர்க்கவும். இவை பயனற்றவை அத்துடன்  தசை நார்களையும்  சேதப்படுத்தக்  கூடியவை.
  4.  மதுபானம் விஷத்தைஉடம்பில் விரைவில் பரவச் செய்யும் ஆதலால் அதைகொடுக்கக் கூடாது.
  5.  செவ்விளநீர்,  இளநீர், பழரசங்கள் என்பவற்றை கொடுக்க  கூடாது.  பாம்பு தீண்டலினால் சிறுநீரகத்தில் சேதம் ஏற்பட்டால் இவற்றிலுள்ளபொட்டாசியம் எனப்படும் ஒருவகை உப்புமேலும்  பிரச்சினைகளை ஏற்படுத்த முடியும்.
  6.  அஸ்பிறின் வயிற்றிலே இரத்தகசிவை ஏற்படுத்தும்.  பிரதானமாக முத்திரைபுடையன்  தீண்டியபின் அஸ்பிறின் கொடுக்க கூடாது.
  7.  பயப்படுவதை தவிர்க்கவும் பாம்பு தீண்டியவருக்கு தீங்குவிளைவிக்கக் கூடிய செயல்களில் ஈடுபடுவதை தவிர்க்கலாம்.

Post a Comment

0 Comments