இலங்கை கிரிக்கெட் போட்டிகளில் எல்லா வழிகளிலும் திறமையினை வெளிப்படுத்திய திலகரத்ன டில்ஷான் அவசரமாக ஓய்வு குறித்து அறிவித்தமையானது இந்நேரம், கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் அதிகம் பேசப்படுகின்றதொன்றாக மாறியுள்ளது.
இது குறித்து, டில்ஷான் கூறுகையில்;
“எதிர்வரும் மாதங்களில் ஒருநாள் போட்டிகள் இல்லாதவிடத்து அதற்கென காலம் ஒதுக்கி காத்திருக்க முடியாமையினாலேயே தற்போது நடைபெறும் போட்டிகளின் போது ஓய்வு பெற தீர்மானித்தேன். எனது இடமானது திறமையான மற்றுமோர் இளம் வீரருக்கு களமாக அமையட்டும். நான் வருடக்கணக்கில் கிரிக்கெட் வாழ்விற்காய் என்னை அர்ப்பணித்தேன். எஞ்சிய காலங்களை எனது குடும்பத்துடன் இருக்க விரும்புகிறேன்” என தெரிவித்துள்ளார்.


0 Comments