ஶ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் தலைவர் பதவியை தானாக தற்போதைய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு வழங்கவில்லையெனவும் அது தன்னிடமிருந்து அபகரிக்கப்பட்டதெனவும் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
அனமடுவ பகுதியில் நேற்று நடைபெற்ற நிகழ்வொன்றிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
ஶ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியிலிருந்து ஐக்கிய தேசிய கட்சிக்கு சென்ற சிலர் என்னை தோற்கடித்தனர். பின்னர் ஶ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியை கைப்பற்றி புதிய செயலாளர் மற்றும் செயற்குழுக்களை உருவாக்கி கட்சியை சீரழிக்க முயற்சித்தனர். இதன்போதே நான் கட்சியை அவர்களிடம் கையளித்தேன். கட்சியை நான் தானாக வழங்கவில்லை. அது என்னிடமிருந்து அபகரிக்கப்பட்டது. என அவர் தெரிவித்துள்ளார்
0 Comments