Ad Code


 

Ticker

6/recent/ticker-posts

ஹேக்கர் ஜனாதிபதியின் இணையத்தளத்திற்கு பிரவேசித்து பிரதமருக்கு சிவப்பு சமிஞ்சை..

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் இணையத்தளத்தின் மீது ஸ்ரீலங்கன் யூத் என்று தம்மை அடையாளப்படுத்திக் கொண்டுள்ளவர்களினால் நேற்று மாலை சைபர் தாக்குதல் நடத்தப்பட்டிருந்தது.
சிங்கள தமிழ் புதுவருட காலத்தில் கல்விப் பொதுத்தராதர உயர்தர பரீட்சையை நடத்துவது தொடர்பில் தாம் அதிருப்தியடைவதாக இந்தக்குழு தெரிவித்திருந்தது
இலங்கையின் இணையத்தளங்கள் தொடர்பில் அவதானமாக இருக்குமாறு கோரியுள்ள இந்தக்குழு, இல்லையேல் இலங்கையில் இணையயுத்தம் ஏற்படலாம் என்றும் எச்சரித்திருந்தது.
உங்களுக்கு இவற்றை செய்யமுடியாது போனால் ஜனாதிபதி தேர்தலை நடத்த வேண்டும் என்றும் அந்தக்குழு கோரியிருந்தது.
மேலும், பிரதமரின் பொறுப்பற்ற செயல்கள் தடுக்கப்பட வேண்டும். பல்கலைக்கழக மாணவர்களின் பிரச்சினை தீர்க்கப்பட வேண்டும் என்றும் அந்த இணையத்தில் ஸ்ரீலங்கன் யூத் குழுவினால் கோரிக்கை முன்வைக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில் சில மணித்தியாங்களின் பின்னர் குறித்த இணையத்தளம் இயல்பு நிலைக்கு கொண்டு வரப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
Hacked

Post a Comment

0 Comments