இலங்கை கிரிக்கெட் அணியின் தலைவராக இருந்த சமயம் முன்னாள் தலைவர்கள்,பயிற்சியாளர்கள் அதேபோன்று சில வீரர்கள் கூட எனக்கு எவ்வித ஒத்துழைப்பினையும் வழங்காத சந்தர்ப்பங்களும் இருக்கத்தான் செய்தது, என திலகரத்ன டில்ஷான் பெரும் சங்கடங்களுக்கு மத்தியில் தெரிவித்துள்ளார்.
என்னை தலைமையிலிருந்து விலக்கிய போது, மிகவும் மனவேதனையடைந்ததாகவும், ஏஞ்சலோ மேத்யூஸ் ஒரு வருடமாக உபாதையில் இருந்தமை குறித்தும் டில்ஷான் நினைவூட்டியிருந்தார்.
எவ்வாறாயினும், டில்ஷான் தலைமைப் பதவியிலிருந்து இருக்கின்ற போது இருந்த முன்னாள் தலைவர்களான மஹேல ஜெயவர்தன மற்றும் குமார் சங்கக்கார ஆகியோர் நேற்றுமுன்தினம்(28) இடம்பெற்ற போட்டி குறித்து தமது உத்தியோகபூர்வ ட்விட்டர் தளத்திலிருந்து கருத்துக்களை வெளியிட்டிருந்தார்.
சங்கா குறிப்பிடுகையில்;
சந்திமால் அவரது சதத்தினை குறியாய் வைத்து சிறந்த ஆட்டத்தினை வெளிப்படுத்தியிருந்தார். என்றாலும், டில்ஷானிற்காக வேண்டி போட்டியின் வெற்றியினை தக்கவைக்க முடியாமல் போய்விட்டதாக தெரிவித்துள்ளார்.

மஹேல ஜெயவர்தன கருத்துத் தெரிவிக்கையில்;
சந்திமால் சிறப்பாக ஆடியிருந்தார். என்றாலும் அணியினால் வெற்றியினை தக்கவைக்க முடியாமல் போய்விட்டது. ஓய்வு பெறும் டில்ஷானினை தாம் வாழ்த்தி எமது சங்கத்துடன் இணைத்துகொள்கின்றோம் என தெரிவித்துள்ளார்.

0 Comments