Advertisement

Responsive Advertisement

பம்பலப்பிட்டி வர்த்தகர் கொலை தொடர்பாக 5 வர்த்தகர்களிடம் இன்று விசாரணை

பம்பலப்பிட்டி கோடீஸ்வர வர்த்தகர் மொஹமட் சுலைமானின் கொலை தொடர்பாக தகவல்கள் அறிந்தவர்கள் என சந்தேகிக்கப்படும் 5 பேரும் இன்றைய தினம் விசாரணைக்காக கொழும்பு குற்றப் புலனாய்வு பிரிவுக்கு அழைக்கப்பட்டுள்ளனர்.
இதன்படி அவர்களிடம் விசாரணை நடத்தவுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இவர்கள் 5 பேருக்கும் கொலை தொடர்பான தகவல்கள் தெரியுமெனவும் இதன்படி இவர்களை வெளிநாடுகளுக்கு செல்ல முடியாதவாறு நீதிமன்றத்தினால் தடை விதிக்கப்பட்டுள்ளது.
குறித்த வர்த்தகரிடம் கடன் பெற்றுள்ளவர்களே இவ்வாறாக விசாரணைக்காக அழைக்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்கதக்கது. 

Post a Comment

0 Comments