இலங்கையில் தமிழ் மக்களை உள்நாட்டு யுத்தத்தின்போது பாதுகாப்பதற்கு சர்வதேச சமூகம் தவறி விட்டது என்று குற்றம் சாட்டியிருக்கும் அமெரிக்காவின் ஒக்லாந்து ஆய்வு நிறுவனத்தின் நிறைவேற்று பணிப்பாளரும் கடந்த வருடம் இலங்கை அரசாங்கத்தை கடுமையாக சாடி ஆதாரங்கள் பலவற்றுடன் ‘ யுத்தத்தின் நீண்ட நிழல்: யுத்தத்துக்கு பின்னரான இலங்கையில் நீதிக்கான போராட்டம் ‘ என்ற நீண்ட ஆய்வு அறிக்கை ஒன்றை வெளியிட்டவருமான அனுராதா மிச்சால், “இலங்கை உள்நாட்டு யுத்தம் மற்றும் தமிழ் மக்களுக்கு எதிராக தொடர்ந்து நடைபெறும் பாகுபாடுகள் ஆகியவற்றின் பின்னாலுள்ள வரலாற்றையும் சர்வதேச சமூகம் புரிந்துகொள்ள தவறிவிட்டது என்றும் கூறியிருக்கிறார்.
கன்வசேஷன் டிவி நிகழ்ச்சிக்கு அளித்துள்ள பேட்டி ஒன்றிலேயே இவ்வாறு தெரிவித்துள்ள அனுராதா, இலங்கையில் ஐக்கிய நாடுகள் சபை உண்மை மற்றும் நல்லிணக்கம் ஆகியவற்றை ஏற்படுத்த வேண்டுமானால் அரசியல்வாதிகளின் விளையாட்டுக்களுக்கு ஏற்ப அன்றி அதன் ஆணையை பின்பற்றி செயற்பட வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார்.
இலங்கையில் உள்நாட்டு பொறிமுறை ஒன்றின் மூலம் நீதி ஒருபோதும் நிலைநாட்டப்பட முடியாது என்றும் சர்வதேச பொறிமுறை கட்டாயமாக ஏற்படுத்தப் படவேண்டும் என்றும் கூறியுள்ளார்.
மஹிந்த ராஜபக்ஷ ஆட்சியில் இருந்தபோது மனித உரிமைகள் மீற்றர்கள் தொடர்பில் ஆய்வு செய்து ஆதாரங்களை திரட்டுவதற்காக டிசம்பர் 2015 ஆம் ஆண்டு இலங்கைக்கு விஜயம் செய்து வடக்கு மற்றும் கிழக்கு பகுதிகளுக்கு விஜயம் செய்த அனுபவங்களையும் அவர் இந்த நேர்காணலில் பகிர்ந்துகொண்டுள்ளார்.
இந்த நேர்காணலை கீழே காணலாம்:


0 Comments